நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபுவை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்துள்ளது. அரசியல் அரங்கில் விவாதமாக மாறியுள்ளது.  

மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவும் ஒருவர். இவர் நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது துரைமுருகனும் உடன் இருந்தார். இந்த நிலையில், இன்று ஆந்திர மாநிலம் அமராவதிக்கு குடும்பத்தோடு சென்ற துரை முருகன்,அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் உடன் இருந்தார். 

இதுசந்திப்பு தொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த துரைமுருகன்; சந்திரபாபு உடனான சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல. மனைவி மகனுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் அமராவதியில் சென்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன் எனக் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு வெறும் 10 நாட்களே உள்ள நிலையில், இரண்டு அரசியல் தலைவர்கள் சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.