மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் துரை முருகன் தரப்பினரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது. அப்போது முதல் ஸ்டாலினுக்கும் துரை முருகனுக்கும் இடையே ஒரு பனிப் போர் நிலவி வருவதாக திமுக தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் ஸ்டாலின் எங்கு சென்றாலும் அங்கு துரைமுருகன் இருப்பார். ஆனால் சமீப காலமாக துரை முருகன் ஸ்டாலினுடன் செல்வதில்லை. அவர் குறைத்துக் கொண்டாரா அல்லது தவிர்த்து வருகிறாரா ? என உடன்பிறப்புகளே தலையை பிய்த்துக் கொள்கின்றனர்.அதே நேரத்தில் ஸ்டாலினும் துரை முருகனை கண்டு கொள்வதில்லை. 

இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு நாள் ஸ்டாலினை சந்தித்த துரை முருகன் தனக்கு ஒரு வாரம் ஓய்வு தேவைப்படுவதாகவும் லீவு வேண்டும் என்று பெர்மிஷன் கேட்டு வாங்கியுள்ளார்.

இதையடுத்து திடீரென ஒரு நாள் டெல்லி புறப்பட்டுச் சென்ற துரை முருகன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உதவியுடன் சில முக்கிய பாஜக தலைவர்களை சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

வேலூர் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக என கூறி பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் அப்போது போடப்பட்ட வழக்கு போன்றவை குறித்து பாஜக தலைவர்களிடம் துரை முருகன் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டபோது அவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.