திமுக பொருளாளர் துரைமுருகன் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு  வந்தார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் அதிகமானதால் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

துரைமுருகனுக்கு நெஞ்சலி ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தற்போது துரை முருகனின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துளளது.

கடந்த சிலவாராங்களில் துரை முருகன் மூன்றாவது முறையாக அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது...