* நாத்திகம் பேசுவோர் தன்னை தமிழர் என்று கூறிடவே அறுகதை அற்றோர். இலங்கையை சிவபூமி என்று அழைக்கின்றனர். இலங்கையில் இருக்கும் நாங்கள் இந்து மதத்தில் பற்றோடு உள்ளோம்:    இலங்கை எம்.பி. யோகேஸ்வரன். (இப்படியெல்லாம் நீங்க சுத்தி வளைச்சுப் பேசுறதுக்கு, ஈழ விவகாரத்தை வெச்சு ஒரு பக்கம் அரசியலும், இன்னொரு பக்கம் நாத்திகமுமா பேசிட்டு இருக்கிற தி.மு.க., ம.தி.மு.க., திருமா டீமை நேரடியாவே தாக்கியிருக்கலாம்.)

* தெலுங்கானாவின் கவர்னராகும் தமிழிசைக்கு வாழ்த்துக்கள். ஆனாலும், பா.ஜ.க. அரசு அப்பட்டமாக தனது கட்சியின் நிர்வாகிகளையே கவர்னராக்குகிறது. இது ஜனநாயகத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. இப்படி நியமிக்கப்படும் கவர்னர்கள் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவார்கள்:     நாராயணசாமி. (என்ன முதல்வரே ரொம்ப பெருந்தன்மையா வாழ்த்து சொல்றீங்களே!ன்னு பார்த்தா, அடுத்த நொடியே சொந்த பிரச்னையை சொல்லி புலம்பிக் கொட்டிட்டீங்களே?)

* தமிழக முதல்வர், முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். அவரது பயணத்தால் மாநிலத்துக்கு நன்மைகள் விளையும். உள்ளாட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட தயாராக உள்ளது: சரத்குமார். (அதென்ன பாஸ் சீரியஸா முதல்வரின் பயணத்தைப் பற்றி பேசிட்டு இருக்கிறப்ப, திடீர்ன்னு உள்ளாட்சி தேர்தல், உங்க கட்சின்னு காமெடி பண்ணிட்டீங்க. வரவர நீங்க பழைய ஹீரோங்கிறதை மறக்குறீங்க.)

* வெளிநாடு செல்லும் முன்பாக தன் பொறுப்பையும், அதிகாரத்தையும் பிறரிடம் வழங்குவது முதல்வரின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது:    ஓ.பன்னீர் செல்வம். (தலைவரே உங்க வாய் மிக அழகான விளக்கத்தை புன்னைகையோடு வழங்குது. ஆனாலும் உங்க கண்ணு வேர்க்குதே ஏன் தலைவரே! ஒரு பத்து நாளாச்சும் முதல்வர் பதவியை உங்க கிட்ட கொடுத்துட்டு போயிருக்கலாமேன்னு நீங்க வந்துறது புரியுது, புரியுது. என்ன செய்ய? எல்லாம் அவரோட அதிகார வரம்புக்கு உட்பட்டதாச்சே!?)

* ஜனவரியில் விஜய் சேதுபதியுடன் ஒரு படம் பண்ணுகிறேன். தொடர்ந்து இனி நல்ல படங்களைக் கொடுப்பேன்!: சேரன். (ஆனாலும் உங்க நிலைமை இப்படியாக கூடாதுண்ணே. எம்மாம் பெரிய டைரக்டர் நீங்க, அந்த பிக்பாஸ் வூட்டுக்குள்ளே போனாலும் போனீங்க ‘இனி நல்ல படங்கள் கொடுப்பேன்’ன்னு உங்களோட பழைய பொன்னான படங்களைப் புண்ணாக்கிட்டீங்களே!)