Asianet News TamilAsianet News Tamil

கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த பகுதியில் மழை.. வானிலை மையம் தகவல்.

கிழக்கு  திசை  காற்றலைகளின் காரணமாக. அடுத்த  24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனவும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

Due to east direction winds  Rain in this area for the next 24 hours .. Weather Center Info.
Author
Chennai, First Published Feb 2, 2021, 2:58 PM IST

கிழக்கு  திசை  காற்றலைகளின் காரணமாக அடுத்த  24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனவும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. 

Due to east direction winds  Rain in this area for the next 24 hours .. Weather Center Info.

03.02.2021 முதல் 06.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

Due to east direction winds  Rain in this area for the next 24 hours .. Weather Center Info.

கடந்த 24 மணி நேரத்தில் பாம்பன்  (ராமநாதபுரம் ) 2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 02.02.2021 முதல் 04.02.2021 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என  அறிவுறுத்தப்படுகிறார்கள். என எச்சரிக்கப்பட்டுள்ளது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios