Asianet News TamilAsianet News Tamil

டிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..!

முன்னாள் முதல்வர் ஜெயலிதா மறைந்தது 4 ஆம் தேதி மாலையே உயிரிழந்து விட்டார்கள் , நான் நேரடியாக சென்று எனது சகோதரியிடம், முதல்வர் ஜெயலலிதா இறந்தது குறித்து அறிவிப்பது தொடர்பான முடிவுகளை எடுத்தோம். அப்படி செய்தால் தான் ஆட்சியும் , கட்சியும் கட்டிக் காக்கப்படும் என பேசினேன் அதன்படியே செய்தோம்

DTV Dhinakaran sleeper cell .. Office, EPS should conduct an inquiry into J's death .. Divakaran interview ..!
Author
Madurai, First Published Oct 29, 2020, 10:10 PM IST

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திவாகரன், “தமிழகத்தில் கல்வித் துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படவில்லை, தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட முதல்வர் வேட்பாளர்கள் உள்ளனர்.

DTV Dhinakaran sleeper cell .. Office, EPS should conduct an inquiry into J's death .. Divakaran interview ..!

எனது சகோதரியின் நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் முடியப் போகிறது. விரைவில் வெளியே வரப் போகிறார். எனது சகோதரியை கண்ணாமூச்சி விளையாடி உள்ளே வைத்துள்ளார்கள் , எனது சகோதரியுடன் உடன் இருந்தவர்கள் தவறான வழிகாட்டுதலின் காரணமாகவே அவர் சிறைக்கு செல்ல நேரிட்டது. எனது சகோதரிக்கு எதிராக ஏராளமான சதிகள் நடந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலிதா மறைந்தது 4 ஆம் தேதி மாலையே உயிரிழந்து விட்டார்கள் , நான் நேரடியாக சென்று எனது சகோதரியிடம், முதல்வர் ஜெயலலிதா இறந்தது குறித்து அறிவிப்பது தொடர்பான முடிவுகளை எடுத்தோம். அப்படி செய்தால் தான் ஆட்சியும் , கட்சியும் கட்டிக் காக்கப்படும் என பேசினேன் அதன்படியே செய்தோம்.

DTV Dhinakaran sleeper cell .. Office, EPS should conduct an inquiry into J's death .. Divakaran interview ..!

தற்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் சின்னம்மா அவர்களை முதல்வராக்கி விடுவோம் என கூறினார். அவரை தவறாக பேசக்கூடாது அவர்தான் முதலில் சின்னமாகவே முதல்வராக்க வேண்டும் என பேசியவர். மன்னார் குடியை சேர்ந்தவர்கள் கூவத்தூரில் அனைவரையும் பாதுகாத்து தற்போதுள்ள ஆட்சி அமைக்க சாவியை கொடுத்து விட்டு வந்தோம். தற்போது நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர் எனக் கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் கொடுத்த சாவியை நான்காண்டுகளாக எடப்பாடி பழனிசாமி பத்திரமாக வைத்துள்ளார்.

DTV Dhinakaran sleeper cell .. Office, EPS should conduct an inquiry into J's death .. Divakaran interview ..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்த விசாரணை முடியும் நிலைக்கு வந்துவிட்டது. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளது. திருமாவளவன் பெண்களை கடுமையாக மதிக்க கூடியவர். அவர் எந்த இடத்திலும் பெண்களை அவதூராக பேசவில்லை. இன்று இருக்க கூடிய சூழலை பார்த்தோமென்றால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. டிடிவி தினகரன் ஒரு ஸ்லீப்பர் செல் தான் அவருக்கு ஒரு ஸ்லீப்பர் செல் தேவையில்லை” எனக் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios