எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவை  நடத்தி வரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டிற்கு முன்பாக, ஆயில் ராஜா நேற்று  இரவு தகராறு செய்து  உள்ளார். தெருவில் நின்றுக் கொண்டே தகாத வார்த்தைகளை பயன்படுத்தி சத்தம் போட்டு உள்ளார். 

இதனை தொடர்ந்து அவர் மீது, எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவையின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும் விதிகளுக்கும், மாறாக தொடர்ந்து கழகத்திற்கு 
களங்கத்தை விளைவித்து வருவதாக A.V.ராஜா, கழகத்தில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும்  விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொது செயலாளர் திருமதி ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு A.V.ராஜா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து A.V.ராஜா மீண்டும் கட்சியில், ஜெ.தீபாவால் இணைத்துக் கொள்ளப்பட்டார்.  நிலையில், A.V.ராஜா கட்சியில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

அதில், எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவையின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும், விதிகளுக்கும், மாறாக, தொடர்ந்து கழகத்திற்கு களங்கத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் கடந்த 17 ஆம் தேதி முதல் கழகத்தில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் என அனைத்து பொறுப்புகளில் இருந்தும் A.V.ராஜா விடுவிக்கப்படுவதாக, தெரிவித்துள்ளார்.

அவருடன் கழக உறுப்பினர்கள் யாரும் கட்டுப்பாட்டை மீறி எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று என கேட்டுக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் ஜெ.தீபா கூறியுள்ளார்.

மேலும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும, ஆயில் ராஜா தீபா வீட்டின் முன்பாக   நின்று, பிரச்னை செய்து வருகிறார். ஜெயலிலிதா ஆட்சியில் அவர் யாரிடமும் மோத மாட்டார். அப்படி ஒரு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அது கருணாநிதி அளவில் தான் இருக்கும். எதிரியுடன் மோதுவதற்கு கூட தகுதி பார்பவர் ஜெயலலிதா. ஆனால் அவருடைய அண்ணன் மகளான தீபா தற்போது தனியாக தனி  பேரவை நடத்தி வந்தாலும்,  தெருச்சண்டை அளவில் கொண்டு வந்து விட்டது என பலரும் விமர்சனம்  செய்து வருகின்றனர்.