Asianet News TamilAsianet News Tamil

குடி குடிப்பவரின் குடும்பத்தை மட்டுமின்றி அடுத்தவ குடும்பத்தையும் கெடுக்கும்.. அதுக்கு இதுவே உதாரணம்..அன்புமணி

மிகவும் ஆபத்தான பணி செய்யும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு இதுவரை தனிநபர் காப்பீடு இல்லை என்பது வருந்தத்தக்கது. அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான பணி செய்வதால், அவர்களுக்கு ரூ.50,00,000க்கு தனிநபர் காப்பீடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Drinking spoils not only the drinker's family but also the next family... anbumani ramadoss
Author
Tamil Nadu, First Published May 15, 2022, 7:20 AM IST

கொல்லப்பட்ட நடத்துனர் பெருமாள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மறைவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னையிலிருந்து விழுப்புரம் சென்ற பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்படி கூறிய நடத்துனர் பெருமாளை போதையில் வந்த பயணி அடித்துக் கொலை செய்திருக்கிறார். கொல்லப்பட்ட நடத்துனரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Drinking spoils not only the drinker's family but also the next family... anbumani ramadoss

குடி குடிப்பவரின் குடும்பத்தை மட்டுமின்றி, மற்றவர்களின் குடும்பத்தையும் கெடுக்கும் என்பதற்கு இது தான் கொடிய உதாரணம் ஆகும். நெடுஞ்சாலைகளில் திறந்து வைக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் தான் இத்தகைய கொடுமைகளுக்கு காரணம் ஆகும். மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும்.

கொல்லப்பட்ட நடத்துனர் பெருமாள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மறைவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

Drinking spoils not only the drinker's family but also the next family... anbumani ramadoss

மிகவும் ஆபத்தான பணி செய்யும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு இதுவரை தனிநபர் காப்பீடு இல்லை என்பது வருந்தத்தக்கது. அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான பணி செய்வதால், அவர்களுக்கு ரூ.50,00,000க்கு தனிநபர் காப்பீடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்.. ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த திமுக மாஜி MLA பேரன்..!

இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. பயணி தாக்கியதில் அரசு பேருந்து நடத்துனர் உயிரிழப்பு..!

Follow Us:
Download App:
  • android
  • ios