Asianet News TamilAsianet News Tamil

பாஜகவின் தேர்தல் சின்னத்தை வரைக... மணிப்பூரில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 4 மார்க் கேள்வி!

மணிப்பூரில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த 22-ம்  தேதி அரசியல் அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. இதில் 4 மதிப்பெண் பகுதியில், ‘பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னத்தை வரைக’ என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்த விஷயம் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய சகோதரியின் வினாத்தாளை இம்பாலைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். 

Draw bjp election symbol in plus two general exam in manipur
Author
Manipur, First Published Feb 25, 2020, 10:42 PM IST

மணிப்பூர் மாநிலத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் பாஜகவின் சின்னத்தை வரையும் கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.Draw bjp election symbol in plus two general exam in manipur
மணிப்பூரில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த 22-ம்  தேதி அரசியல் அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. இதில் 4 மதிப்பெண் பகுதியில், ‘பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னத்தை வரைக’ என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்த விஷயம் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய சகோதரியின் வினாத்தாளை இம்பாலைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது. பலரும் இந்தக் கேள்வி அடங்கிய வினாத்தாளை சமூக ஊடங்களில் பகிர்ந்து விமர்சித்துவருகிறார்கள்.

Draw bjp election symbol in plus two general exam in manipur
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், பிளஸ் டூ பொதுத்தேர்வில் கேட்கப்பட்டுள்ள இந்தக் கேள்வி மணிப்பூரில் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. “மாணவர்களிடையே தவறான அரசியல் எண்ணத்தை உருவாக்க பாஜக முயற்சி”ப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  ஆனால், “ நேரு பற்றி கேட்கப்பட்ட கேள்வி தவறல்ல” என்று பாஜக தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios