Asianet News TamilAsianet News Tamil

தலைநகர் டெல்லியில் தலைநிமிரும் திராவிடக் கோட்டை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்.

ஏப்ரல் 2-ஆம் நாள் நடைபெறும் திறப்பு விழாவில் பங்கேற்றிட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், மாண்புமிகு குடியரசுத் துணைத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா அவர்கள், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டுள்ளது.


 

Dravidian fort in the capital Delhi .. Tamilnadu CM Stalin proud.
Author
Chennai, First Published Mar 30, 2022, 10:43 AM IST

இந்திய ஒன்றியத்தின் தலைநகராம் புதுடெல்லியை நோக்கி அமைகிறது.டெல்லிக்குச் சென்று, மார்ச் 31 அன்று மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களையும், மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களையும் சந்திக்கவிருக்கிறேன்.

தொடர்ந்து, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களையும், ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களையும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களையும் சந்திக்கவிருக்கிறேன்.தமிழ்நாட்டில் கழக அரசு அறிவித்துள்ள திட்ங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தர வேண்டிய வரி வருவாய், மழை - வெள்ள நிவாரணத் தொகை உள்ளிட்ட நம்முடைய மாநில உரிமைகளுக்கான சந்திப்பு இது. அதனைத் தொடர்ந்து இந்திய அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு இருக்கிறது. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, டெல்லிப் பட்டணத்தில் திராவிடக் கோட்டையாக உருவாகியுள்ள கழக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் ஏப்ரல் 2-ஆம் நாள் திறக்கப்படுகிறது.

Dravidian fort in the capital Delhi .. Tamilnadu CM Stalin proud.

நாடாளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்ததன் அடிப்படையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2013-ஆம் ஆண்டு டெல்லி தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் நமது கழகத்திற்கு அலுவலகம் அமைப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டது. காலம் கனிந்த நிலையில், தற்போது அந்த இடத்தில் அறிவாலயம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. இயக்கத்தின் கொள்கையும் உடன்பிறப்புகளின் உணர்வும் குழைத்து உருவாக்கப்பட்ட இலட்சிய மாளிகை! திராவிட மாளிகையாக டெல்லிப்பட்டணத்தில் அண்ணா-கலைஞர் அறிவாலயம் எழுந்து நிற்கிறது. உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனையில் உருவான கட்டடங்கள் போலவே, 3 தளங்களைக் கொண்ட டெல்லி அறிவாலயமும் திராவிடக் கட்டட அமைப்பின்படி உருவாக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: மருமகள் நடத்தையில் சந்தேகம்.. வீட்டிற்குள் சிசிடிவி கேமராவை வைத்த மாமியார்.. மூக்கை பதம் பார்த்த மருமகள்.!

உயரமான நான்கு தூண்களைக் கொண்ட முகப்பு, நுழைவாயிலில் அண்ணா-கலைஞர் இருவரது மார்பளவு சிலை, கழக நிர்வாகிகள் ஆலோசிப்பதற்கான இடம், தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கான அறைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட நூலகம், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நிர்வாகிகள் தங்குவதற்கான அறை என முத்தமிழறிஞரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அண்ணா - கலைஞர் அறிவாலயம் அழகுற அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கழகக் கிளை அமைந்துள்ள இடங்களில் சொந்தமாக கட்டடம் கட்டி, அதன் ஒரு சாவியைத் தன்னிடம் தர வேண்டும் என்பது பேரறிஞர் அண்ணாவின் விருப்பம். பொதுக்கூட்டங்களுக்கு வரும்போது ஹோட்டலில் தங்காமல், கழக அலுவலகத்தில் தங்கி, தனது தம்பிகளுடன் உரையாடவேண்டும் என்பது அவர் எண்ணம். பேரறிஞர் பெருந்தகை அண்ணா மறைந்தாலும் அவர் எண்ணம் மறைந்துவிடாதபடி சென்னையில் அவர் பெயரில் அறிவாலயம் அமைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர். அதன்பிறகு, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் கலைஞர் அறிவாலயம் என்ற பெயரில் சொந்தக் கட்டடங்கள் அழகுடனும் வசதியுடனும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது, இந்திய ஒன்றியத் தலைநகரில் அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை உருவாக்கியிருக்கிறோம்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், ‘I belong to the Dravidian Stock’ என்று முழங்கி, சுதந்திர இந்தியாவின் அரசியல் தலைவர்களை முதன்முதலில் தெற்கு நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். “இந்தியாவின் தலைநகரம் டெல்லியா, சென்னையா” என்று வடபுலத்துத் தலைவர்கள் கேட்கும் வகையில், இந்திய அரசியலில் பல குடியரசுத் தலைவர்களையும் பிரதமர்களையும் உருவாக்கிடும் ஆற்றல் மிக்க தலைவராக விளங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

Dravidian fort in the capital Delhi .. Tamilnadu CM Stalin proud.

அந்த அண்ணாவும் கலைஞரும் இன்று நம்மிடையே இல்லை. பேராசிரியர் பெருந்தகை இல்லை. தலைவர் கலைஞரின் மனசாட்சியாக விளங்கிய முரசொலி மாறன் அவர்கள் இல்லை. எனினும், அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்றும் வகையில், டெல்லிப் பட்டணத்தில் அறிவாலயம் அமைந்திருக்கிறது.ஏப்ரல் 2-ஆம் நாள் நடைபெறும் திறப்பு விழாவில் பங்கேற்றிட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், மாண்புமிகு குடியரசுத் துணைத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா அவர்கள், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: கொங்கு மண்டலத்தில் நுழையும் சசிகலா.! ஓகே சொன்ன அதிமுகவினர்.. பயத்தில் எடப்பாடி.!!

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தலைவர் கலைஞர் மீது அளவற்ற மரியாதை கொண்டவருமான திருமதி. சோனியா காந்தி அம்மையார் அவர்கள், மேற்கு வங்காள முதலமைச்சர் செல்வி.மமதா பானர்ஜி அவர்கள், இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள், சமூகநீதியை நிலைநாட்டப் பாடுபடும் கட்சிகளின் தலைவர்கள், மதச்சார்பற்ற கொள்கையில் உறுதிகொண்ட தலைவர்கள் உள்ளிட்ட பலரும் திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்கள்.

இந்திய ஒன்றிய அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கொள்கைகளை செயல்வடிவமாக்கும் திராவிட மாடலும் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன. அதன் அழுத்தமான அடையாளம்தான் டெல்லியில் திறக்கப்படும் அண்ணா - கலைஞர் அறிவாலயம். இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். தெற்கின் வரலாற்றை டெல்லிப்பட்டணத்தில் எழுதும் பெருமிதமிகு நிகழ்வு ஏப்ரல் 2 அன்று நடைபெறுகிறது. உடன்பிறப்புகளாகிய உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உவகை அடைகிறேன்; பெருமை கொள்கிறேன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios