Asianet News TamilAsianet News Tamil

அடிதூள் திராவிடமாடல்னா சும்மாவா.? இந்த ஒரு விஷயத்திற்காக , ஸ்டாலினை தலையில் வைத்து கொண்டாடும் வைகோ.

போலி பத்திரப் பதிவு ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்திருப்பது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை  சரித்திரத்தில் அடுத்த மைல்கல் என தமிழக அரசுக்கு வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். 

Dravida model government's achievement of bringing in the Fake Deed Registration Act - Vaiko
Author
First Published Sep 29, 2022, 2:38 PM IST

போலி பத்திரப் பதிவு ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்திருப்பது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை  சரித்திரத்தில் அடுத்த மைல்கல் என தமிழக அரசுக்கு வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

தமிழகத்தில் சில ஆண்டுகளாக போலியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும், நிலம் மற்றும் சொத்துகளை மோசடியாக பத்திரப் பதிவு செய்து வருவது தொடர்ந்து கொண்டிருந்தது. தி.மு.கழக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது.

Dravida model government's achievement of bringing in the Fake Deed Registration Act - Vaiko

இதையும் படியுங்கள் :   PFI-க்கு தடை விதித்துள்ள நிலையில் RSS பேரிணியா.? மறுபரிசீலனை பண்ணுங்க.. கோர்ட்டில் கதறும் தமிழ்நாடு போலீஸ்.

அதன்படி போலி ஆவணம், ஆள் மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை பதிவுத் துறையே ரத்து செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இச்சட்ட முன்வரைவுக்கு கடந்த ஆகஸ்டு 6 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன், சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. 

இதையும் படியுங்கள் : இறுமாப்போடு பேசும் திமுக அமைச்சர்களுக்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.. இபிஎஸ் ஆவேசம்..!

நில அபகரிப்பு செய்து, போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது குறித்து மாவட்டப் பதிவாளர்களால் புகார் மனு பெறப்படும் பட்சத்தில், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை விசாரித்து, பதிவு செய்யப்பட்ட பத்திரம் போலியானது என்று கண்டறிந்தால், அதை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

Dravida model government's achievement of bringing in the Fake Deed Registration Act - Vaiko

போலிப் பத்திரப் பதிவால் பாதிக்கப்பட்டவர்களின் பதிவு ரத்து செய்யப்பட்டதற்கான ஆணைகளை நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரிமையாளர்களிடம் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இச்சட்டத்தின் மூலம் போலி பத்திரப் பதிவை அறவே ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரத்தில் இது இன்னொரு மைல் கல் ஆகும்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios