Asianet News TamilAsianet News Tamil

திமுக கூட்டணியில் இழுபறி... கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்... கலங்கும் தோழமை கட்சிகள்..!

தலா 2 தொகுதிகளை கேட்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு சீட்டு மட்டுமே ஒதுக்கப்படும் என திமுக தலைமை கறார் காட்டுவதால் கூட்டணியை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. 

Dragged into the DMK coalition
Author
Tamil Nadu, First Published Mar 4, 2019, 1:11 PM IST

தலா 2 தொகுதிகளை கேட்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு சீட்டு மட்டுமே ஒதுக்கப்படும் என திமுக தலைமை கறார் காட்டுவதால் கூட்டணியை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது

 Dragged into the DMK coalition

திமுகவுடன் கூட்டணி குறித்து 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி குழுவினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏற்கெனவே கேட்டு வந்த இரு தொகுதிகளை கேட்டுள்ளது. அப்போது இரு கம்யூஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கறாராக கூறி விட்டது. Dragged into the DMK coalition

நெத்தியடியாக திமுக எடுத்த முடிவை உடபே ஏற்றுக்கொள்ள முடியாத பாலகிருஷ்ணன் யோசித்து சொல்வதாக வெளியேறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதி எண்ணிக்கை குறித்து கட்சி செயற்குழுவில் பேசி முடிவெடுக்கப்படும். திமுகவுடன் நாளை 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போது நல்ல முடிவு எடுக்கப்படும். திமுக- கம்யூனிஸ்ட் கட்சிகளின் நோக்கம் பாஜகவை தோறகடிக்க வேண்டும் என்பதே என அவர் கூறினார். Dragged into the DMK coalition

இந்நிலையில் வேறு வழியின்றி திமுக ஒதுக்க முன் வந்துள்ள ஒரு தொகுதிகளை மட்டுமே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இன்று திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்படும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios