Asianet News TamilAsianet News Tamil

இது இந்தி திணிப்பு இல்லாம என்னவாம்..? ரயில்வே துறை மீது கடுங்கோபத்தில் டாக்டர் ராமதாஸ்..!

இந்தி பேசாத மக்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தி அனுப்புவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு ஆகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Dr.Ramadoss slam Railway department Irctc
Author
Chennai, First Published Oct 4, 2020, 8:56 PM IST

ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அதற்கான குறுஞ்செய்தி இந்தியில் அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரை பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கான குறுஞ்செய்திகள் கடந்த இரு நாட்களாக இந்தியில் அனுப்பப்படுகின்றன. இந்தி பேசாத மக்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தி அனுப்புவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு ஆகும். இதை ரயில்வே துறை கைவிட வேண்டும்!

Dr.Ramadoss slam Railway department Irctc
இந்திய அலுவல் மொழிச் சட்டம் -1976 தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது. இந்த சட்டத்தின் ‘சி’ பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் அனைத்து அலுவல் சார்ந்த அறிவிப்புகளும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். அதை மீறி இந்தியில் குறுஞ்செய்தி அனுப்பியது கண்டிக்கத்தக்கது! தமிழ்நாட்டில் ரயில் முன்பதிவு குறுஞ்செய்தி இந்தியில் அனுப்பப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் தமிழிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட வேண்டும்!” என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios