Asianet News Tamil

டாஸ்மாக் இல்லா பூமியாக தமிழகம் மாறும்... அதை டாக்டர் ராமதாஸ் பார்த்துக்குவார்.. சொல்றது சீதாபாட்டி, ராதாபாட்டி

தமிழ்நாடு மதுவுக்கு அடிமையாகி விட்டது. இனி மதுக்கடைகளை மூடவே முடியாது. அவ்வாறு மூடினால் மதுவுக்கு அடிமையானவங்க எல்லாம், மதுவைக் கேட்டு வீடுகளில் வன்முறை செய்வார்கள். கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்றெல்லாம் நிறைய பேர் கதை விட்டாங்க. ஆனா அப்படி எதுவும் நடக்காதது ரொம்ப சந்தோஷம்டி. இனி நீ நிம்மதியா இருப்பே. நாலு காசு சேர்த்து உன் மகளை நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி குடுப்பேங்கிறத நினைக்கும் போதே மனசுக்கு இதமா இருக்குடி.
 

Dr, Ramadoss on Tasmac Close in corona curfew days
Author
Chennai, First Published Apr 10, 2020, 9:23 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை... மதுவில்லாத தமிழ்நாடு காண ஆசை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரு கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தியிடுக்கிறார்.
கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 25 முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிவாசனை இல்லாமல் குடிமகன்கள் நாட்களைக் கழித்துவருகிறார்கள். இந்நிலையில் மதுவில்லாத தமிழ் நாடு காண ஆசை என்று டாக்டர் ராமதாஸ் சீதாபாட்டி, ராதா பாட்டி என்ற தலைப்பில் உரைடாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீதா பாட்டியின் செல்பேசி ஒலிக்கிறது. அருகிலிருந்த சீதா பாட்டி உடனடியாக செல்பேசியை எடுக்கிறார். மறுமுனையில் அவரது தோழி ராதா பாட்டி செல்பேசியை எடுத்து வணக்கம் சொல்வதற்குள்ளாகவே மறுமுனையிலிருந்து தேனினும் இனிய குரலில், ‘‘சின்னச் சின்ன ஆசை... சிறகடிக்கும் ஆசை; முத்து முத்து ஆசை... முடிந்து வைத்த ஆசை” என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதை பாடுபவர் ராதா பாட்டி என்பதை அடையாளம் காணவே சில நொடிகள் ஆனது சீதா பாட்டிக்கு.
இனி உரையாடல் தொடர்கிறது...
சீதா பாட்டி: ஆஹா.... அற்புதம்டி ராதா. உனக்கு இப்படி ஒரு குரல் வளமா? நான் எதிர்பார்க்கவே இல்லைடி. அருமையா இருந்ததுடி. கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது முதல் உன்னை பார்க்கவே இல்லை. போன வாரம் பேசின. இன்னிக்கு நானே உன்னிடம் பேசலாம்னு நெனைச்சுகிட்டு இருந்தேன். அதற்குள்ளாக நீயே லைனில் வந்துட்ட. அது சரி. என்னாடி திடீர்னு உற்சாகம். வீட்டிலே ஏதும் விஷேசமாடி?
ராதா பாட்டி: அக்கா விஷேசமா... அதுக்கும் மேல அக்கா. ஊரடங்கு முடிஞ்சி வீட்டுக்கு வா அக்கா. உனக்கு விருந்தே வைக்கிறேன்.
சீதா பாட்டி: அடேங்கப்பா... நீ சொல்றதை பார்க்கும் போது எனக்கே உற்சாகம் தொத்திக்கும் போல இருக்குதேடி. சரி... விஷயத்தை சொல்லு.
ராதா பாட்டி: நீ உற்சாகம் தொத்திக்கும்னு சொல்ற. ஆனா எங்க வீட்டுல 17 நாளா உற்சாகம் தொத்திக்கில அக்கா. அது தான் எங்க வீட்டுல விஷேசம் அக்கா.
சீதா பாட்டி: அட என்னடி நீ புதிர் போடுற. விஷயத்தை உடைச்சி சொல்லுடி. சில விஷயங்களில் நான் சரியான டுயூப் லைட்டுடி.


ராதா பாட்டி: சரிக்கா.... சொல்றேன்க்கா. எங்க வூட்டுல ஒன்னு இருக்குதுல்ல. அதான்கா.... நான் கட்டிகிட்டேன. உனக்கே தெரியும்கா. கஷ்டப்பட்டு வீட்லேயும், வெளியிலேயும் வேலை செஞ்சு காசு கொண்டுட்டு வந்தா, என்னை அடிச்சி போட்டுட்டு எல்லா பணத்தையும் புடுங்கிட்டு போய் குடிச்சிட்டு வந்துடுமே...
சீதா பாட்டி: ஆமாம்... உன் புருஷனத் தானே சொல்ற. அது தான் தெரிஞ்ச கதையாச்சே. நானே பலமுறை கூப்பிட்டு கண்டிச்சிருக்கேன். ஆனாலும் திருந்துனபாடு இல்லை. அதைப் பத்தி ஏன் இப்ப சொல்றே. உன் புருஷன் குடிக்கிறத விட்டு, திருந்துனா அது தான்டி அதிசயம். அப்படி ஒன்னு நடந்தா மட்டும் சொல்லு. இப்ப ஏன் தேவையில்லாம அதைப் பத்தி பேசுற
ராதா பாட்டி: அட அக்கா. நீ சொல்லுற அந்த அதிசயம்தான்கா நடந்துடிச்சி.
சீதா பாட்டி: அட... உன் புருஷன் குடிக்கிறத விட்டுட்டானா. என்னால நம்பவே முடியலைடி. இதை முதல்ல சொல்லாம ஏன்டி நீ புதிர் போட்ட?
ராதா பாட்டி: அட நான் எங்கக்கா புதிர் போட்டேன். நான் சொல்றத கேட்டு உங்களுக்கு உற்சாகம் தொத்திக்கிதுன்னு நீங்க சொன்னீங்க. அதுக்குதான் நான் சொன்னேன்... எங்க வூட்டுல உற்சாகம் 17 நாளா தொத்திக்கிலன்னு சொன்னேன். அதிலேருந்தே நீங்க புரிஞ்சிக்க வேணாமா?
சீதா பாட்டி: ஓ.... நான் சொன்ன உற்சாகம் சந்தோஷம். நீ சொன்ன உற்சாகம் என்பது உற்சாக பானமா? எனக்கு அது புரியாம போச்சிடி. அதுசரி அந்த அதிசயம் எப்படி நடந்துது?
ராதா பாட்டி: எல்லாம் அந்த ராமதாசு அய்யா புண்ணியம்தான். கொரோனா வந்தது முதலே அவரு தான அரசாங்கம் அதை செய்யனும், இதை செய்யனும்னு சொல்லிட்டு இருந்தாரு. நம்ம அரசாங்கம் 144 தடை போட்டுட்டு, பார்களை மட்டும் மூட உத்தரவு போட்டுச்சு. அய்யய்யோ அப்படி செஞ்சா அது சரக்க வூட்டுக்கு வாங்கிட்டு வந்து குடிக்குமேன்னு கவலைப் பட்டேன். ஆனால், அதுக்குள்ள அந்த அய்யா நம்ம சி.எம்மு கிட்ட பேசி டாஸ்மாக் கடைகளையும் மூட வச்சிட்டாரு. அப்புறம் இது எங்க வெளியில போறது. ஆரம்பத்துல சில நாட்கள் சரக்கு இல்லாம அனத்துச்சி. இப்ப பழகிடுச்சி. இதுக்கு மேல சரக்கு கிடைச்சா கூட குடிக்க மாட்டேன்னு அது சொல்லிடுச்சி அக்கா.
சீதா பாட்டி: அப்படியா... உங்க வீட்டுக்காரரு சொன்னதை காற்றுல எழுதி வைக்கிறதா? தண்ணில எழுதி வைக்கிறதா?
ராதா பாட்டி: அக்கா கிண்டல் பண்ணாதேக்கா. நான் சொல்றது முற்றிலும் உண்மைக்கா.


சீதா பாட்டி: அப்படி ஒன்னு நடந்தா எனக்கு அதை விட சந்தோஷம் என்னடி? தமிழ்நாடு மதுவுக்கு அடிமையாகி விட்டது. இனி மதுக்கடைகளை மூடவே முடியாது. அவ்வாறு மூடினால் மதுவுக்கு அடிமையானவங்க எல்லாம், மதுவைக் கேட்டு வீடுகளில் வன்முறை செய்வார்கள். கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்றெல்லாம் நிறைய பேர் கதை விட்டாங்க. ஆனா அப்படி எதுவும் நடக்காதது ரொம்ப சந்தோஷம்டி. இனி நீ நிம்மதியா இருப்பே. நாலு காசு சேர்த்து உன் மகளை நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி குடுப்பேங்கிறத நினைக்கும் போதே மனசுக்கு இதமா இருக்குடி.
ராதா பாட்டி: உண்மைதான்கா. மது ஒழிஞ்சா தங்களின் வருமானம் பாதிக்கப்படும் என்று யார் நினைக்கிறார்களோ, அவர்கள்தான் இதுபோன்ற கதைகளையெல்லாம் கட்டி விட்டிருப்பார்கள். ஆனால், அதெல்லாம் பொய் என்பது இப்போது நிரூபணம் ஆகி விட்டதுக்கா. எங்கள் வீடு குடிசையாக இருந்தாலும், இனி மதுவில்லா மாளிகையாக இருக்கும்கா.
சீதா பாட்டி: உன் வீடு என்னடி ஒட்டுமொத்த மாநிலமும் மதுவில்லாத பூமியாக மாறும்டி கவலைப்படாதே.
ராதா பாட்டி: எனக்கு ஒன்னும் கவலை இல்லைக்கா. எல்லாத்தையும் அந்த ராமதாசு அய்யா பாத்துக்குவாரு.

Follow Us:
Download App:
  • android
  • ios