Asianet News TamilAsianet News Tamil

அந்த அரசியல் அதிசய மனிதர் யார்..? டாக்டர் ராமதாஸ் மீண்டும் மீண்டும் புதிர்.. குழப்பத்தில் ட்விட்டர்வாசிகள்!

“திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்” எனத் தெரிவித்தார்.
 

Dr.Ramadoss new tweet about political leader
Author
Chennai, First Published Jun 3, 2020, 7:07 PM IST

ஏற்கனவே மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி, ஒரு தலைவரை நம்பக் கூடாது என்று சொல்லியதாகப் பூடாகமாகப் பதிவிட்ட டாக்டர் ராமதாஸ், தற்போது ‘யார் இந்த அரசியல் அதிசய மனிதர்’ என்ற புதிய புதிரைப் போட்டுள்ளார்.Dr.Ramadoss new tweet about political leader
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இயங்கக்கூடியவர். உலக நடப்புகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரை அனைத்தையும் ட்விட்டரில் தெரிவித்துவிடுவார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பூடாகமாக ஒரு ட்விட்டை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார். அதில், “திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்” எனத் தெரிவித்தார்.Dr.Ramadoss new tweet about political leader
இதனையடுத்து அந்தத் தலைவர் யார் என்பது பற்றி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், பலரும் பல தலைவர்களின் பெயர்களைப் பதிவிட்டு, அவரைப் பற்றிதான் கருணாநிதி கூறியிருப்பார் என்று தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்ட ராமதாஸ், “இந்தப் பதிவுக்கான பின்னூட்டத்தில் பலரும் பல தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், கலைஞர் குறிப்பிட்டது அதிமுக, திமுக, திக, மதிமுக, தேமுதிக, பாஜ௧, காங்கிரஸ், பொதுவுடைமை இயக்கங்கள், விசிக, ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பெயர்களையோ, மறைந்த தலைவர்களின் பெயர்களையோ அல்ல!” என்று தெரிவித்திருந்தார்.Dr.Ramadoss new tweet about political leader
பல கட்சிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அக்கட்சி தலைவர்களைப் பற்றி கருணாநிதி கூறவில்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தது பலரையும் குழப்ப வைத்தது. இ ந் நிலையில் அதேபோன்றதொரு ட்விட்டர் பதிவை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதில், “யார் இந்த அரசியல் அதிசய மனிதர்?’’ விரைவில் முகநூலில் புதிய புதிர். கண்டுபிடிக்கக் காத்திருங்கள்!” என்று சஸ்பென்ஸ் வைத்து பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

Follow Us:
Download App:
  • android
  • ios