Asianet News TamilAsianet News Tamil

இடஒதுக்கீட்டால் முன்னேறி, அதற்கு எதிராக பிதற்றல்.. ’அரைகுறை’களுக்கு புரிய வைக்க தொடர் எழுதுவதாக ராமதாஸ் அதிரடி

 ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பது காலம் காலமாக நடப்பதுதானே. அதேபோல்தான் இட ஒதுக்கீட்டின் உதவியால் முன்னேறிய பலரும் இப்போது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பிதற்றுவதும், இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் உளறுவதும் தொடர்கதையாகி வருகிறது. சமூக நீதி என்பது சும்மா கிடைத்து விடவில்லை என்ற உண்மையை இட ஒதுக்கீடு, சமூகநீதி குறித்த அரைகுறை புரிதல் உள்ளவர்களுக்கு புரிய வைப்பதற்கான முயற்சியாக ‘சுக்கா மிளகா சமூகநீதி?’ என்ற தலைப்பிலான விழிப்புணர்வுத் தொடரை எழுதுகிறேன். 

Dr.Ramadoss announced that new series write about social justice
Author
Chennai, First Published Jun 2, 2020, 8:58 PM IST

இட ஒதுக்கீட்டின் உதவியால் முன்னேறிய பலரும் இப்போது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பிதற்றுவதும், இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் உளறுவதும் தொடர்கதையாகி வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Dr.Ramadoss announced that new series write about social justice
ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய பக்கங்களில் தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். உள்ளூர் முதல் உலகம் வரை நடக்கும் நிகழ்வுகளை வைத்து அன்றைய தினம் பதிவிட்டுவிடுவார் டாக்டர் ராமதாஸ். இந்நிலையில் ஃபேஸ்புக் பக்கத்தில் நாளை முதல் ‘சுக்கா, மிளகா, சமூகநீதி?’ என்ற தொடரை எழுதப்போவதாக அறிவித்துள்ளார்.Dr.Ramadoss announced that new series write about social justice
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பக்கத்தில், “ஏணி, தோணி, ஏற்றம் என என்ன பெயரில் சமூகநீதியை அழைத்தாலும் அது மிகவும் பொருத்தமாகத்தான் இருக்கும். சமூகநீதியும், அதன் அங்கமான இட ஒதுக்கீடும் இல்லாவிட்டால் தமிழகத்தில் பல சமுதாயங்கள் இன்னும் பள்ளங்களில்தான் கிடக்கும். முன்னேற்றம் என்பதை பல சமுதாயங்களால் எழுத்துக் கூட்டிக்கூட படித்திருக்க முடியாது. இந்த உண்மையை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.Dr.Ramadoss announced that new series write about social justice
ஆனால், ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பது காலம் காலமாக நடப்பதுதானே. அதேபோல்தான் இட ஒதுக்கீட்டின் உதவியால் முன்னேறிய பலரும் இப்போது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பிதற்றுவதும், இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் உளறுவதும் தொடர்கதையாகி வருகிறது. சமூக நீதி என்பது சும்மா கிடைத்து விடவில்லை என்ற உண்மையை இட ஒதுக்கீடு, சமூகநீதி குறித்த அரைகுறை புரிதல் உள்ளவர்களுக்கு புரிய வைப்பதற்கான முயற்சியாக ‘சுக்கா மிளகா சமூகநீதி?’ என்ற தலைப்பிலான விழிப்புணர்வுத் தொடரை எனது முகநூல் பக்கத்தில் நாளை (03.06.2020) முதல் எழுதுகிறேன்.” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios