சிவகங்கை அருகே 80 பவுன் நகைக்காக  இரட்டை கொலை அரங்கேறியிருக்கிறது.கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்திருக்கிறது. இருந்தபோதிலும் லடாக் பகுதியில் நாட்டுக்காக பணியில் இருக்கும் ராணுவ வீரரின் வீட்டில் இப்படியொரு கொலை நடந்திருப்பதை பொதுமக்களும் அவரது உறவினர் குற்றம் சாட்டிவருகின்றனர்.  

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடுக்கூரணி கிராமத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சந்தியாகு தனது மனைவி ராஜகுமாரி மருமகள் சினேகா அவரது 8 மாத பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். அவரது மகன் ஸ்டீபன்  ராணுவத்தில் லடாக்யில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்   சந்தியாகு நேற்று இரவு தோட்டத்தில் இருந்துள்ளார்  வீட்டில் மாமியார் மருமகள் குழந்தையுடன் இருந்த அத நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த    ராஜகுமாரி மருமகள் சினேகாவை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்து விட்டு  வீட்டில் இருந்த 80 பவுன் தங்க நகையுடன் இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்து தப்பிச்சென்றனர்.


 8 மாத பெண் குழந்தை உயிருடன் தப்பிய நிலையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டுகாரர்கள் அதிகாலையில் பார்க்க இரட்டை கொலை கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவந்ததது. அதனை தொடர்ந்து காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வருண்குமார் தலைமையில் தீவிரவிசாரணை நடத்தி கை ரேகைகள் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் அழைத்து வந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஒரு ராணுவ வீரரின் குடும்பத்தில் இரட்டை கொலை நடந்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வரும்.இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு எற்பட்டுள்ளது.

சந்தியாகு ஓய்வு பெற்றவர் அவரது மகன் ஸ்டீபன் லடாக்கிலும் இன்னெரு மகன் ராஜாவும் ராணுவத்தில் பணிபுரிகின்றனர்.குடும்பமே ராணுவ குடும்பம் என்பது குறிப்பிடதக்கது. காளையார்கோவில் பகுதியில் மட்டும் வீட்டிற்கு ஒருவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.