பள்ளிகளில் பாலியல் புகார்கள் வரும் போது நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்ய கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பள்ளிகளில் பாலியல் புகார்கள் வரும் போது நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்ய கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவருக்கு அதே பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி இதுக்குறித்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் என்பவரிடம் புகார் அளித்து அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து மாணவி அந்த மாணவி கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்து அவரது பெற்றோர் கேட்டபோதும் ஒன்றும் இல்லை என கூறியுள்ளார். மேலும் தான் பயிலும் பள்ளியில் படிப்பை தொடர விருப்பமில்லை என அவர் பெற்றோரிடம் கூறி வேறு பள்ளியில் அவரை சேர்த்துவிடுமாறும் கேட்டுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் அந்த சிறுமியை ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்த்துள்ளனர். இந்த நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதை அடுத்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகிய இருவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த நிலையில் படிக்கும் இடத்தில் பாலியல் தொல்லை அளித்தால் அதுக்குறித்து புகார் அளிக்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவி எண்ணை அறிவித்தார். 14417 என்ற எண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று கூறிய அவர், போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாணவ, மாணவிகள் அச்சப்படாமல் புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் பள்ளிகளில் பாலியல் புகார்கள் வரும் போது அவப்பெயர் ஏற்படும் என்று பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்ய கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.

திருச்சியில் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சிப் பணிமனையினை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறையை, மற்ற மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்ல உள்ளதாகக் கூறினார். மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரச்சனை என்றால் அதன் மீது நடவடிக்கை எடுக்கும் போது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்பதால், பல பள்ளிகள் பிரச்னைகளை விசாரிக்காமல் விட்டு விடுகின்றனர் என்றும் எனவே, பள்ளிகளில் பிரச்சனை ஏற்படும் போது பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்யக் கூடாது என்றும் எச்சரித்தார். மாணவர்களின் நலம் கருதி உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.