குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் வந்தலி என்ற இடத்தில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு  பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா , இந்த அரசாங்கம் அனைத்து முனைகளிலும் தோல்வியடைந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

மோடி ஆட்சியில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ,  தலித்துகள் என  எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெட்டி ஸ்லோகன்களை மட்டுமே பாஜகவினர் கூறி வருகின்றனர். எதிர்வரும்  தேர்தல் தான் இந்த அரசாங்கத்தை தூக்கி எறிய ஒரே வழி என்றும் அவர் தெரிவித்தார். .

2014-ல் நடந்த பொதுத்  தேர்தல்களுக்கு முன்னரே வாக்குறுதிகளை அளித்தபோது பி.ஜே.பி.யில் ஒரு அங்கமாக  இருந்ததால் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் என்றும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.