இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சேலத்திலும் அதிகாரி ஒருவரும் மொழிப்பிரச்னையால் சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறார். 

புதுவையில் நியமன எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் ஞானசேகரன் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு இது தொடர்பாக அளித்த பதில் தகவல்கள் இந்தியில் இருந்துள்ளன. இந்தியில் பதில் அனுப்பப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ஞானசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தவழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கும் இந்தி தெரியாது என தெரிவித்த நீதிபதி, ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சேலத்திலும் அதிகாரி ஒருவரும் மொழிப்பிரச்னையால் சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சேலம் போலீஸ் கமிஷனராக இருப்பவர் பீஹாரைச் சேர்ந்த நஜ்முல் ஹோதா. கடந்த ஜூன் மாதம் பொறுப்புக்கு வந்தார். அதற்கு முன் இருந்த கமிஷனருக்கு போகிற விண்ணப்பங்கள், பைல்கள் எல்லாம் தமிழில்தான் இருக்குமாம். 

ஆனால் இப்போது, 'எந்த பைலையும் இங்கிலீஷ்ல தான் வைக்கணும்' என கமிஷனர் ஆபீஸ் நிர்வாக அதிகாரி மாலதி சொல்லி இருக்கிறார். 'கமிஷனர் முன்பு, தர்மபுரி எஸ்.பி.,யாக இருந்தபோது, நானும் அங்கே வேலை செய்து இருக்கிறேன். அவர் எந்த பைலையும் இங்கிலீஷில்தான் கேட்பார்' என காரணம் சொல்லி இருக்கிறார். இதனால், இங்கிலீஷில் பரிச்சயம் இல்லாத பலரும் திக்கித் திணறிக் கொண்டு இருக்கிறார்களாம்.