Asianet News Tamil

வாக்களிக்க கூடவா எனக்கு உரிமை இல்லை? தன் இயலாமையை எண்ணி குமுறும் சசிகலா...

சட்டமன்ற தேர்தலில் தன்னால் வாக்களிக்க முடியாது என்பதை உணர்ந்த சசிகலா தனது நிலையை எண்ணி மிகவும் வருத்தத்தில் இருப்பதாகவும், நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க கூட முடியாத அளவிற்கு அப்படி என்ன நாள் தவறு செய்துவிட்டேன், இந்த ஜனநாயக உரிமை கூட எனக்கு இல்லையா என அவர் மனம் நொந்து வருத்தத்தில் இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Dont I have the right to vote? Sasikala feeling about her disability ...
Author
Chennai, First Published Apr 6, 2021, 11:47 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

வாக்களிக்க கூடவா எனக்கு உரிமை இல்லை? அந்த அளவிற்கு நான் என்ன பாவம் செய்தேன்? என ஜெயலலிதாவின் தோழி சசிகலா உச்சகட்ட மனவேதனையில் இருப்பதாக அவரின் நெருங்கி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர், தனது வேதனையை  இவ்வாறு வெளிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாகவும், நம்பிக்கைக்குரிய தோழியாகவும் கம்பீரத்துடன் வலம் வந்தவர் சசிகலா. ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று அவர் திரும்புவதற்குள் அவரின் மொத்த அரசியல் வாழ்க்கையும் தலைகீழாக மாறியுள்ளது. சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுகவுக்கு தலைமை ஏற்பார் என்று பரபரப்பாக பேசப்பட்டுவந்த நிலையில், அரசியலில் இருந்தே விலகி இருப்பதாக ஒதுங்கிக்கொண்டார் சசிகலா. 

அன்றோடு அவரது அதரவாளர்கள் மத்தியில் சசிகலாவின் மீது இருந்த மொத்த எதிர்பார்ப்பும் சுக்குநூறாக நொறுங்விட்டது, அந்த அளவிற்கு அவரது முடிவு அதிர்ச்சியை கொடுப்பதாக இருந்தது. மேலும், போயஸ் கார்டன் இல்லத்தை நினைவுச்சின்னமாக மாற்றும் பணி தொடங்கப்பட்ட பின்னர் அந்த முகவரியில் இருந்த சசிகலா உள்ளிட்ட 19 பேரின் பெயர்கள் பட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் உட்பட மற்றவர்கள் அவர்களது பெயரை இன்னொரு குடியிருப்பு முகவரியில் பதிவு செய்திருந்தாலும், சசிகலா மற்றும் இளவரசி சிறையில் இருந்ததால் புதிய  முகவரியில் அவர்களது பெயர்களை சேர்க்க முடியவில்லை. அவர்கள் சிறையில் இருந்ததால் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்கள் வாக்களிக்கவில்லை, ஆனால் தற்போது அவர்கள் வழக்கிலிருந்து விடுதலையாகி உள்ளனர்.  

சிறைக்குச் சென்ற கையோடு தனது அரசியல் செல்வாக்கு, அதிகாரம் என அனைத்தையும் இழந்து நிற்கும் சசிகலா நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும் இழந்துள்ளார். வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளதை அறிந்த அமமுகவினர் அரசியல் உள்நோக்கத்துடன் இது நடந்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த உடன் அவரது வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா  சாகுவை சந்தித்து வாக்காளர் பட்டியலில் மீண்டும் சசிகலாவின் பெயரை இணைக்க வலியுறுத்தினார். ஆனால் அதற்கான அவகாசம் முடிந்து விட்டதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என அவர் கைவிரித்துவிட்டதால் அதற்கு மேல் தங்களாங் எதுவும் செய்ய முடியவில்லை என அவரது வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். 

இதனால் சட்டமன்ற தேர்தலில் தன்னால் வாக்களிக்க முடியாது என்பதை உணர்ந்த சசிகலா தனது நிலையை எண்ணி மிகவும் வருத்தத்தில் இருப்பதாகவும், நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க கூட முடியாத அளவிற்கு அப்படி என்ன நாள் தவறு செய்துவிட்டேன், இந்த ஜனநாயக உரிமை கூட எனக்கு இல்லையா என அவர் மனம் நொந்து வருத்தத்தில் இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios