தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை  மறந்துவிட்டு பேசியிருக்கிறார் என உதயநிதி ஸ்டாலினுக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் தொடர்புபடுத்திப் பேசி, அருவறுப்பாக விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு நாலாபுறமும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இதுகுறித்து டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், ‘’பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி. 

 

நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை  மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி! பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது’’ எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் பலரும் '’ஒழுக்கமான பெண்களை பெத்தவன் எவனும் திமுகவுக்கு இதுக்கு மேல் ஓட்டு போடமாட்டான் என்று மக்கள் உதயநிதி பேச்சை கேட்டு கருத்து தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கருணாநிதி காலம் தொடங்கி இன்று வரை பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதில் இருந்து திமுக மாறபோவதில்லை’’எனக் கூறி வருகின்றனர்.