Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வு வேண்டாம்... தமிழகத்தை அடுத்து மகாராஷ்டிரா பிடிவாதம்..!

நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு, போலி மாணவர்கள் பங்கேற்பு உள்ளிட்ட முறைகேடுகள் தொடர் கதையாகி வருவதாக குறிப்பிட்டுள்ள நானா பட்டோலி, நீட் தேர்வு சமத்துவம் இல்லாத தேர்வு என விமர்சித்துள்ளார். 

Dont choose NEET ... Maharashtra stubborn after Tamil Nadu ..!
Author
Maharashtra, First Published Sep 22, 2021, 3:54 PM IST

நீட் தேர்வில் மகாராஷ்டிராவுக்கு விலக்கு தேவை என வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். 

நீட் தேர்வில் இருந்து மகாராஷ்டிராவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு காங்கிரஸ் தலைவர் மாநிலத் தலைவர் நானா பட்டோலி. எழுதியுள்ள கடித‌த்தில், நீட் தேர்வால் மத்திய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே பயன் பெறுவதாகவும், மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.Dont choose NEET ... Maharashtra stubborn after Tamil Nadu ..!

மேலும் நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு, போலி மாணவர்கள் பங்கேற்பு உள்ளிட்ட முறைகேடுகள் தொடர் கதையாகி வருவதாக குறிப்பிட்டுள்ள நானா பட்டோலி, நீட் தேர்வு சமத்துவம் இல்லாத தேர்வு என விமர்சித்துள்ளார். எனவே நீட் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவை மகாராஷ்டிரா அரசும் பின்பற்ற வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios