குடியரசு தலைவரும், மாநில ஆளுனர்களும் அவர்கள் மாளிகைகளில் "இஃப்தார்" விருந்து அளிக்கும் போது வாயை மூடிக்கொண்டு இருந்த இந்த ஓவைசி போன்றவர்கள் இப்போது பிரதமர் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வது மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது என்று அசாதுதீன் ஓவைசி என்று கூறி வருகிறார். 

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில், எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை ராம் என்ற பெயரின் சாராம்சமாகும். ராமர் ஒவ்வொருவரிடமும் உள்ளார். ராமர் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறார். ராமர் மற்றும் தாய் சீதையின் செய்தி மற்றும அருளால், ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழா, தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார சபைக்கான ஒரு சந்தர்ப்பமாக மாற வேண்டும். ஜெய் ஸ்ரீராம் ராம்’’ எனக் கூறியிருந்தார். 

 பிரியங்கா காந்தியின் வாழ்த்து செய்தி வெளியான அடுத்த சில மணி நேரத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்து, ’’அவர்கள் இனி நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி. இந்துத்துவாவின் இந்த தீவிரவாத சித்தாந்தத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்பினால் பரவாயில்லை. ஆனால் சகோதரத்துவத்தை பற்றி இந்த வெற்றுப் பேச்சு ஏன்? வெட்கப்பட வேண்டாம். எங்கள் பாபர் மசூதியை இடித்த இயக்கத்திற்கு உங்கள் கட்சி அளித்த பங்களிப்புகளை பற்றி பெருமிதம் கொள்ளுங்கள்’’என பதிவு செய்துள்ளார்.