சிஏஏ-வால் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை . அரசியல்வாதிகள் தங்களது லாபத்துக்காக தூண்டி விடுகின்றனர் என ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’என்.பி.ஆர் முக்கியம் அவசியம். சிஏஏ விவகாரத்தில் பீதி கிளப்பி விட்டுள்ளனர்.  பிரிவினையின் போது செல்லாமல் இங்கேயே தங்கி விட்ட இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.  மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால் தான் வெளிநாட்டினர் யார் என்பது தெரியும்.

 

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தர வேண்டும்.  நான் நேர்மையாக வரி செலுத்துகிறேன். சட்ட விரோதமாக எந்தத் தொழிலும் செய்யவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பேசியதற்காக எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை. வந்தால் ஆஜராகி விளக்கம் அளிப்பேன். மாணவர்கள் ஆராய்ந்து போராட வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.