Asianet News TamilAsianet News Tamil

ஒன்றிய அரசு சொல்வதை கண்டு மிரளாதீங்க.. சமூக குற்றமாக பார்க்காதீர்.. பாஜகவுக்கு சரியான பதிலடி கொடுத்த முதல்வர்

ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம் - பயன்படுத்துவோம் - பயன்படுத்திக் கொண்டேயிருப்போம் என முதல்வர் கூறியுள்ளார். 

Don t be fooled by what the Union government says...MK Stalin explained
Author
Chennai, First Published Jun 23, 2021, 1:32 PM IST

ஒன்றியம்' என்ற வார்த்தையை பயன்படுத்தினோம், பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டே இருப்போம் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதம் 2வது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நகேந்திரன் மத்திய அரசை ஒன்றிய அரசு கூறுவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிக்கையில்;- ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறதோ அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். 

Don t be fooled by what the Union government says...MK Stalin explained

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, “இந்தியா, அதாவது மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்" என்றுதான் India, that Is Bharat, shall be a Union of States" என்றுதான் பாரதம் உள்ளது. இருக்கிறது, அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. ‘ஒன்றியம்’ என்பது தவறான சொல் அல்ல "மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது' என்பதுதான் அதனுடைய பொருள் இன்னும் சிலர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லாததை, எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் சொல்லாததை நாங்கள் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டு அதை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Don t be fooled by what the Union government says...MK Stalin explained

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய 1957 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே இந்திய அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. யூனியன் ஜனவரி என்றுதான் நாடாளுமன்ற 1963 25, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய 1957 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே 'இந்திய அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. மாநிலங்களவையில், குறிப்பிட்டார்கள் பேரறிஞர் யூனியன் ஜனவரி என்றுதான் நாடாளுமன்ற பேசுகிறபோது 1963 அண்ணா 25. அவர்கள் "அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது, பொது மக்களிடம் நிலைத்துள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது சட்டம் சார்ந்த இறைமையானது கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங்களுக்கும் இடையே - அதாவது மாநிலங்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளது" என்றுதான் பேசியிருக்கிறார்.

சமஷ்டி' என்ற வார்த்தையை மரியாதைக்குரிய ம.பொ.சி. அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். வருக உண்மையான 'வெளியேறுக மிகுதியான அதிகாரக் குவிப்பு கூட்டாட்சி' என்று மூதறிஞர் ராஜாஜி அவர்களே எழுதியிருக்கிறார்கள் எனவே ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம் - பயன்படுத்துவோம் - பயன்படுத்திக் கொண்டேயிருப்போம் என முதல்வர் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios