உங்கள் கட்சிக்கு அறிவு இருக்கிறதா? செத்தா உங்களுக்கு என்ன?தவறை ஒப்புக் கொண்டு அண்ணாமலை என்ன சொன்னார் தெரியுமா?

புயல் வரும் நாள் அன்று இப்படி பிஜேபி கொடியை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வைத்துள்ள உங்கள் கட்சிக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா அண்ணாமலை  அவர்களே??

Does your party have knowledge? Annamalai admitted the mistake

புயல் வரும் நாளில் சென்னையில் சாலை தடுப்பில் பிஜேபி கொடியை வைத்துள்ள உங்கள் கட்சிக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா அண்ணாமலை அவர்களே?? கேட்ட ஜெயராம் வெங்கடேசனுக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாலை தடுப்புகளில் பாஜகவினரின் கொடிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளதற்கு அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க;- மணல் கொள்ளைக்கு எதிராக பாஜக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்... அறிவித்தார் அண்ணாமலை!!

Does your party have knowledge? Annamalai admitted the mistake

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- புயல் வரும் நாள் அன்று இப்படி பிஜேபி கொடியை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வைத்துள்ள உங்கள் கட்சிக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா அண்ணாமலை  அவர்களே?? கொடி காற்றில் விழுந்து 4 பேர் செத்தா உங்களுக்கு என்ன?  காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 

 

ஆனால், இதற்கு எந்த கோபமும் பாடாமல் தவறை ஒப்புக்கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அண்ணா! உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம். நன்றி என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  நீங்கள் சொன்னதை செய்தாலே பெட்ரோல் டீசல் விலை தானாக குறையும்.. அமைச்சர் PTR விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios