ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தால் வேலூர் மாவட்டம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு, ரயிலில் குடிநீர் எடுத்து வர ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பொருளாளர் துரைமுருகன், ஜோலார்ப்பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லப்பட்டால், மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் எனக்கூறினார்.

இது தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கூறுகையில், ஜோலார்ப்பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து வருவதால், வேலூருக்கு அளிக்கும் தண்ணீரின்அளவு குறைக்கப்படாது. ஜோலார்ப்பேட்டை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். யாகம் பலனளித்து மழை பெய்து தண்ணீர் பற்றாக்குறை தீரும்’’ எனக் கூறியிருந்தார். 

போராட்டம் நடத்தப்படும் என துரைமுருகன் கூறியது அவரது குறுகிய மனப்பான்மையை காட்டுவதாக நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள். பக்கத்து ஊருக்கு கூட தண்ணி தராதவர்தான் இந்த துரைமுருகன். தண்ணீர் விசயத்தில், துரோகிகள் திமுகவில் தான் உள்ளனர், இவர்களது சுயரூபத்தை காட்டத்தான், எடப்பாடி இந்த பிளான போட்டாரோ என்னமோ?

உங்க லட்சணம் இதிலிருந்தே தெரியுது. நல்லா வருவீங்க உன்கிட்ட நிறையா எதிர்பார்க்கிறோம். 37 எம்.பிகளை வாரிவழங்கிய மக்களுக்கு நல்லா சொய்யுங்க தல??  குடிக்க தண்ணீர் கூடுக்க முடியாத கேவலமான கட்சி திமுக. இவங்க தான் காவிரி நீர் பேர சொல்லி தமிழன் கன்னடன்னு அரசியல் பண்றது..  சென்னையில் வாழ்க்கை ஓட்ட வேண்டியது தன் மகனை MP ஆக்க நினைத்து வேலூரில் போராட்டத்தை தூண்டுவதா? 

 

இவிங்க தான் கர்நாடகவிலிருந்து காவிரியை மீட்டு தருவாங்க. ஆமா ஜோலார்பேட்டை உங்க அப்பன் வீட்டு சொத்தா என்ன..?  இல்லாத போது இருக்கறத பகிர்ந்து தான் ஆகணும்.. நாளைக்கு வேலூருக்கு பெரிய பஞ்சம் வந்தா எந்த மாவட்டதிலயும் துரைமுருகன் தண்ணி கேக்கமாட்டாரா..? Yes ,this government is absolutely non sense அத நம்ப எலக்ஷன்ல மட்டுந்தா காட்ட முடியும்.

 

ஆனா காட்பாடியிலிருக்கும் துரைமுருகனின் மினரல் வாட்டர் கம்பெனிக்கு மட்டும் எடுத்துச் செல்லலாம்