2106 சட்டமன்ற தேர்தலில் ஒரே நாளில் முதலமைச்சர் பதவியை கைப்பற்றியவர்கள் தமிழகத்தின் ஜெயலலிதாவும், கேரளாவின் பினராயி விஜயனும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலமைச்சர் ஜெயலாலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஆளுநர் வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி, தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், தமிழிசை, வெங்கையா நாயுடு, டி. ராஜா, நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் சென்று பார்த்தனர்.

தேவேகவுடா உள்ளிட்ட பிற மாநில தலைவர்களும், முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று, கேரள ஆளுநர் சதாசிவமும், கேரள முதலமைச்சரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன், முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று அப்போலோ மருத்துவமனை சென்று பார்த்தார்.

டாக்டர்களை சந்தித்துப் பேசிவிட்டு வெளியே வந்த பினராயி விஜயன், முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தனக்கு நல்ல தகவலை கூறியுள்ளார்கள் என பினராயி பேட்டியின்போது தெரிவித்தார்.

நாளுக்குநாள், படிப்படியாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார். முன்னதாக கேரள ஆளுநரும், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான சதாசிவம், ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்குச் சென்று பார்வையிட்டார்.