Asianet News TamilAsianet News Tamil

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்காதது சமூக நீதிக்கு எதிரானது...!! மருத்துவர்கள் சங்கம் ஆதங்கம்..!!

மாநில அரசு நிறுவனங்கள் வழங்கும் இடங்களில் ஏன் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும்  27 விழுக்காடு இட ஒதுக்கீடு மறுக்கப்பட வேண்டும் ? இது சமூக அநீதி அல்லவா?

 
 

doctor association for social and equal statement for MBBS for backward society
Author
Chennai, First Published May 30, 2020, 4:53 PM IST

அகில இந்திய தொகுப்புக்கு மாநில அரசுகள் வழங்கும் மருத்துவ இடங்களில்,இதர பிற்படுத்தப் பட்டோருக்கு  இட ஒதுக்கீடு வழங்காதது சமூக நீதிக்கு எதிரானது. எனவும் இதர பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-  உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலால் 1985 ஆம் ஆண்டு அகில இந்திய தொகுப்பு (ALL INDIA QUOTA) என்பது தொடங்கப்பட்டது. சில மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாமல் இருந்ததாலும், மருத்துவக் கல்வி இடங்கள் மிகக்குறைவாக இருந்ததாலும், அந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக ‘அகில இந்தியத் தொகுப்பு’என்பது உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் அகில இந்தியத் தொகுப்பில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை. அகில இந்தியத்  தொகுப்புக்கு  ,தற்போதுஅனைத்து மாநிலங்களும் தங்களது மருத்துவக் கல்லூரிகளில் இருந்து  50 விழுக்காடு முதுநிலை மருத்துவ மற்றும் முதுநிலை பல் மருத்துவ இடங்களையும், 15 விழுக்காடு இளநிலை மருத்துவ மற்றும் இளநிலை பல் மருத்துவ இடங்களையும் வழங்கி வருகின்றன.சில மத்திய அரசு நிறுவனங்களும் இந்த அகில இந்தியத் தொகுப்பு மூலமாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்கின்றன. 

doctor association for social and equal statement for MBBS for backward society

அகில இந்தியத்  தொகுப்பில்,  மத்திய அரசு நிறுவன  இடங்களில்·பட்டியல் இனத்தவருக்கும், பட்டியல் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்து, பின் 2007 ஆம் ஆண்டிலிருந்து தான் வழங்கப்படுகிறது.மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், உயர் கல்வியில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக , அரசியல் சட்டத்திருத்தம் 2006 ஆம் ஆண்டில் 93 ஆவது அரசில் சட்டம் கொண்டுவரப் பட்டப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உச்ச நீதி மன்றம் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என 2008 ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 2008 ஆம் ஆண்டிலிருந்து இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் 2019 ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்ததின் மூலம் நடைமுறைப் படுத்தப்படும், முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான  10 விழுக்காடு இட ஒதுக்கீடு ,உடனடியாக 2020 ஆம் ஆண்டு முதலே நடைமுறைபடுத்தப்படுகிறது. அகில இந்தியத்  தொகுப்புக்கு  மாநில அரசுகள் வழங்கும் இடங்களில்·பட்டியல் இனத்தவருக்கும், பட்டியல் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு 2007 ஆம் ஆண்டு முதல் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 

doctor association for social and equal statement for MBBS for backward society

அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவரப் பட்டப்பிறகு,   2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 27 விழுக்காடு இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப் பட்டோருக்கு வழங்கப்படவில்லை. ஆனால் 2019 ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்ததின் மூலம் நடைமுறைப் படுத்தப்படும் முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான  10 விழுக்காடு இட ஒதுக்கீடு  2020 ஆம் ஆண்டு முதலேயே வழங்கப்படுகிறது. மாநில அரசு நிறுவனங்கள் வழங்கும் இடங்களில் ஏன் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும்  27 விழுக்காடு இட ஒதுக்கீடு மறுக்கப்பட வேண்டும் ? இது சமூக அநீதி அல்லவா? மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், அகில இந்திய தொகுப்பில் முதுநிலை மருத்துவப் படிப்பில் மட்டுமல்லாது, முதுநிலை பல் மருத்துவப் படிப்பு, இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளிலும்  இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை. இதனால் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்த வருடம் முது நிலை மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய தொகுப்பில் 13 ஆயிரத்து 238  இடங்கள் உள்ளன. இந்த அகில இந்தியத் தொகுப்பிற்கு, மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகள் 8833 இடங்களையும், மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள் 717 இடங்களையும், நிகர்நிலை மருத்துவ பல்கலைக் கழகங்கள்  3,688 இடங்களையும் வழங்குகின்றன.அகில இந்தியத் தொகுப்பிற்கு, மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து  வழங்கப்படும் 717 இடங்களில் மட்டுமே, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு  வழங்கப் படுகிறது. 

doctor association for social and equal statement for MBBS for backward society

முதுநிலை மருத்துவக் கல்விக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெற்றது. அதில் மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளின் ,8833 இடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு  வழங்கப்படவில்லை. இதனால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்திருக்க வேண்டிய 2,386 இடங்கள் இவ்வாண்டு கிடைக்கவில்லை. அகில இந்திய தொகுப்பிற்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் 9550 இடங்களை வழங்குகின்றன. இந்த 9,550 அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில், 7,125 இடங்களை  அதாவது 74.6 விழுக்காடு இடங்களை பொதுப் பிரிவினர் இந்த கலந்தாய்வின் போது எடுத்துள்ளனர்.இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 371 இடங்கள் மட்டுமே   அதாவது வெறும் 3.8 சதவீதம் விழுக்காடு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.இந்திய மக்கள் தொகையில் 52 விழுக்காட்டிற்கு மேல் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோருக்கு , அகில இந்தியத் தொகுப்பு முதுநிலை மருத்துவப் படிப்பில் 3.8 விழுக்காடு இடங்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்துள்ளன.பட்டியல் இனத்தவருக்கு 1385 இடங்களும் (14.5 சதவீதம் ), பழங்குடியினருக்கு 669 இடங்களும் ( 7 சதவீதம் ) கிடைத்துள்ளன.ஆக இதர பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களே மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

doctor association for social and equal statement for MBBS for backward society

இந்த இடங்களை அகில இந்தியத் தொகுப்பிற்கு வழங்காமல் மாநில அரசுகளே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை இருந்திருந்தால்,அதில் அந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள  இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்திருக்கும். தமிழகத்தில் சுமார் 1900 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன.அகில இந்தியத் தொகுப்புக்கு இடங்களை வழங்காமல் இருந்தால் ,இந்த 1900 இடங்களில் சரிபாதி இடங்கள் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்திருக்கும். அதாவது 950 இடங்கள் கிடைத்திருக்கும். அகில இந்தியத் தொகுப்புக்கு இடங்களை வழங்கிய பின்,அதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாததால் தற்போது 475  இடங்கள் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கின்றன.அகில இந்தியத் தொகுப்பு முறை, இதர பிற்படுத்தப் பட்டோருக்கு கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.இள நிலை மருத்துவம் பல்மருத்துவம்,முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 2008 முதல் மிகப் பெரும் பாதிப்பு இதர பிற்படுத்தப்படோருக்கு ஏற்பட்டுள்ளது.எனவே,இந்த  சமூக அநீதியை போக்கிட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios