வீட்டில் இருந்தே வேலை செய்பவர்களுக்கு சிறப்பு அதிரடி சலுகையை அறைவித்துள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 5 உயிர்கள் பலியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பாதுகாப்பு நடவடிக்கையாகவும் பல்வேறு முன்னெடுப்புகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அந்த வரிசையில் வீடிலிருந்தே வேலை செய்யுங்கள் என்று பிரதமர் உட்பட ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் அறிவித்து வருகின்றன. இதனால் வீடுகளில் இருந்து வேலை செய்வோருக்கு இணைய வசதிக்கான தேவை மிகுதியாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பி.எஸ்.என்.எல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் அத்தனை பேருக்கும் இலவச இணைய சேவை Work@Home என்னும் டேட்டா ப்ளான் மூலமாக வழங்கப்பட உள்ளது. இதனால், தினமும் அனைத்து லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கும் 10 எம்.பி.பி.எஸ் இணைய வேகத்தில் தினமும் 5ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இந்த அறிவிப்புக்கு முன்பே பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் வைத்துள்ள பயனர்கள் மட்டுமே இந்த திட்டத்தை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.