காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவுக்குள் எல்லா நாட்டவர்களும் நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் இப்போது சைனா பட்டாசு கூட இந்தியாவிற்குள் வரமுடியவில்லை எனக் கூறியுள்ளார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

இதுகுறித்து பேசிய அவர், ’’தர்மத்திற்கு ஒப்பான நூல்களுள் பெண்களை உயர்வாக மதித்து எழுதிய நூல் மனுதர்ம நூல். அதில், நல்ல விஷயங்கள் நிறைய இருக்கிறது. தவறாக எவனோ மொழிபெயர்த்தை வைத்துக் கொண்டு குற்றம் சுமத்துவது தகுமா? அந்த வீணாய்ப்போன வீரமணி கொடுத்த ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு  சர்ச்சையாக்க கூடாது. அது தவறு. சில கோயில்களில் ஆபாசமாக சிலைகள் இருக்கும். அது எதற்காக தெரியுமா? அன்றைய காலகட்டத்தில் சில விஷயங்களை எடுத்துச் சொல்ல வேறு வழி இல்லை. இல்லறத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகத் தான் அப்படி சொல்லி வைத்திருக்கிறார்கள். அது மாதிரி சில விஷயங்கள் இருக்கும். அந்த சிலைகள் எல்லாம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாக கருதக் கூடாது. 

அந்த சிலையை வடித்த வரும் இந்துக்கள் தான். ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்தவர்தான். அவரது தங்கையும், அக்காவும், சகோதரிகளும் பெண்தானே.  பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? அண்ணா திமுக கட்சியின் கூட்டணி கட்சி. பிரதமர் மோடி இந்த நாட்டினுடைய பிரதமர். வலுவான திறமையான பிரதமர். சீனாக்காரனிலிருந்து அத்தனை நாடுகளும் பயப்படுகின்றன. அதற்கு காரணம் பிரதமராக மோடி இருப்பதால்தான். காங்கிரசின் பத்தாண்டு ஆட்சியில் சோனியாகாந்தியின் பேச்சைக்கேட்டு மண்ணாய் போனார் மன்மோகன்சிங்.

 

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவுக்குள் எல்லா நாட்டவர்களும் நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் இப்போது சைனா பட்டாசு கூட இந்தியாவிற்குள் வரமுடியவில்லை.  அண்ணா திமுகவிற்கு தான் அனைத்து மதமும் அனைத்து குலங்களும் ஓட்டு போட போகிறது’’என அவர் தெரிவித்துள்ளார்.