Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்கு மட்டும்தான் தமிழ் மீது அக்கறையா..? திமுகவுக்கு மத்திய அமைச்சர் கொடுத்த பதிலடி..!

பாஜக தமிழை அழிப்பதாக சில கட்சிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில், திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவுக்கு தமிழில் ட்விட் செய்து பதிலடி கொடுத்துள்ளார் மத்திய அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால். 

Do you only care about Tamil ..? Union Minister retaliates against DMK
Author
Tamil Nadu, First Published Aug 11, 2020, 6:18 PM IST

பாஜக தமிழை அழிப்பதாக சில கட்சிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில், திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவுக்கு தமிழில் ட்விட் செய்து பதிலடி கொடுத்துள்ளார் மத்திய அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால்.

 Do you only care about Tamil ..? Union Minister retaliates against DMK

மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கல்வியில் மும்மொழி கொள்கையை திணிப்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய இந்த குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.Do you only care about Tamil ..? Union Minister retaliates against DMK

இதுகுறித்து திமுக சார்பில் டி.ஆர்.பாலு, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மாற்று மொழியை திணிக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த சந்திப்பு குறித்து ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பதிவில் தமிழில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘’புதிய கல்வி கொள்கை குறித்த கோரிக்கை மனுவை தி.மு.க தலைவர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின்  சார்பாக T.R.பாலுஜி அவர்கள் என்னிடம் சமர்ப்பித்தார். அவரிடம் எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்பதை விளக்கினேன்.

 

மேலும் T.R பாலுஜி அவர்களிடம், பயிற்று மொழியை தெரிவு செய்துகொள்வது அந்தந்த மாநிலங்களின் உரிமை என்பதையும் மற்றும் புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்தும் அவரிடம் விளக்கினேன். நாம் ஒன்றுபட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம்’’ எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிற மொழி மீதும் தங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை ரமேஷ் பொக்ரியால் நேரடியாக உணர்த்தியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios