மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகன் ஒரே டுவிட்டர் பதிவில் தமிழக அரசியலை நிலைகுலைய செய்துள்ளார். 

தமிழகத்தில் இரண்டு பெரிய ஆளுமை உள்ள தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரின் மறைவையடுத்து தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் அளவுக்கு பெரிய தலைவர்கள் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிலும் இல்லாததால் புதுப்புது தலைவர்கள் உருவாகி வருகின்றனர். இதே கருத்தையே அரசியல் விமர்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அடிக்கடி கூறி வருகின்றனர். 

இதை சூசகமாக குறிப்பிடும் வகையில் திமுக தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனும் திரைப்பட தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி ஒரு டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், தங்களின் எதிர்முகாமாக இருந்தாலும் இந்தியாவையே அலறவிட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தையும், தன் தாத்தா கலைஞரின் படத்தையும் போட்டு லீடர்ஸ் ??? என கேள்வி குறி எழுப்பியுள்ளார் டூ யூ மிஸ் தெம் தமிழ்நாடு எனவும் குறிப்பிட்டுள்ளார். 

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வெறுப்பேற்றும் வகையில் கருணாநிதிக்கு பிறகு திமுக வழிநடத்த சரியான ஆளுமை திறன்கொண்ட நபர்கள் யாரும் இல்லை என்பதை தெள்ளதெளிவாக தயாநிதி அழகிரி குறிப்பிட்டுள்ளார்.