திமுகவிற்கு வாக்கு அளித்தவர்கள் ஏன் வாக்களித்தோம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். சமீபத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய முடியாத திமுக அரசு மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் விமர்சனம் செய்யும் எதிர்கட்சியினரை கைது செய்து வருகிறது. இதன் காரணமாகத்தான் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழக அரசுக்கு இந்து கோவில்கள் மீது இவ்வளவு தீவிரம் காட்டும் போது, டிசம்பர் மாதம் 25ம்தேதி கிறிஸ்துமஸ், தினத்தன்று தேவாலயத்தை தவிர வேறு, யாரும் வரகூடாது என்று அறிவிக்க முடியுமா என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தேசிய ஊடகவியலாளர்கள் நலச்சங்கத்தின் 2வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா;- திமுகவிற்கு வாக்கு அளித்தவர்கள் ஏன் வாக்களித்தோம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். சமீபத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய முடியாத திமுக அரசு மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் விமர்சனம் செய்யும் எதிர்கட்சியினரை கைது செய்து வருகிறது. இதன் காரணமாகத்தான் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறாமல், காட்டாட்சி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கருத்து சுதந்திரம் பறிக்க பட்டு வருகின்றது. கோவையில் கொல்லபட்ட இந்து முன்னணி சசிகுமார் கொலையை கூட தமிழக அரசின் காவல் துறை கண்டுபிடிக்கவில்லை. சிபிஐ அதிகாரிகள் வந்து கண்டுபிடித்தனர். திமுக ஆட்சியில் 150க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. அத்தனையும் பட்டா நிலத்தில் இருந்தவை. திமுகவின் இந்து விரோத ஆட்சியால் மக்கள் கோவில்களுக்கு செல்ல முடியவில்லை. பக்தர்களை திருச்செந்துார் சூரசம்ஹார விழாவில் பங்கேற்க விடாமல் தடியடி நடத்தி உள்ளனர்.

திமுக அரசு கோவில்களை கொள்ளையடிக்க திட்டமிட்டு அதற்கான வேலையை தொடங்கியுள்ளது. அதில் ஒன்றுதான் கோவில் நகைகளை உருக்கி 'பிஸ்கெட்' ஆக மாற்றும் நடவடிக்கை. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன். தமிழக அரசுக்கு இந்து கோவில்கள் மீது இவ்வளவு தீவிரம் காட்டும் போது, டிசம்பர் மாதம் 25ம்தேதி கிறிஸ்துமஸ், தினத்தன்று தேவாலயத்தை தவிர வேறு, யாரும் வரகூடாது என்று அறிவிக்க முடியுமா அதற்கு திராணி உள்ளதா என்று எச்.ராஜா பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.