Asianet News TamilAsianet News Tamil

திமுக நம்மை கழட்டிவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? காங்கிரசை கண் கலங்க வைத்த பகீர் தகவல்...

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் தான் அரசியல் வட்டாரத்தில் இப்போதைய ஹாட் டாப்பிக். 

Do you know what the DMK has left us
Author
Chennai, First Published Sep 14, 2018, 4:09 PM IST

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் தான் அரசியல் வட்டாரத்தில் இப்போதைய ஹாட் டாப்பிக்.  இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் காங்கிரசும், ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் பாஜகவும் அரசியல் காய்களை மிக கவனமாக நகர்த்தி வருகின்ற தருணமிது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அரசியலின் பங்கும்  அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இருக்கிறது.

தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் காரணத்தால், காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு கட்சிகளுமே இந்த முறை கூட்டணி வைத்து கொள்ள ஆசைப்படுவது திமுகவிடம் தான். ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசரோ தினகரன் மற்றும் ரஜினி ஆகியோருக்கு நண்பராக இருக்கிறார். 

இதனால் திமுக தரப்பில் இருந்து ஆதரவு கிடைப்பதற்கான வாய்ப்பு இம்முறை குறைவாகவே உள்ளது. எனவே அவரை மாற்றிவிடுங்கள் என காங்கிரஸ் மேலிடத்திடம் முறையிட்டிருக்கின்றனர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், பீட்டர் அல்ஃபோன்ஸ் போன்ற காங்கிரஸ் புள்ளிகள். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வரை அவரை திருநாவுக்கரசரை மாற்ற முடியாது என உறுதியாக தெரிவித்திருக்கிறது காங்கிரஸ் மேலிடம். இதனால் டெல்லியிலேயே தங்கி இந்த விஷயம் குறித்து ஆலோசித்து வருகிறார் .இ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

அதுமட்டுமல்லாமல் தினகரனை எப்படியாவது காங்கிரஸுடன் கூட்டணிவைத்துகொள்ள சம்மதிக்க வேண்டும் என்றும் முயன்று வருகின்றார். இதனால் தான் தலைமை விரும்பினால் தினகரனை கூட்டணியில் சேர்த்து கொள்ளலாம் என ஒரு பேட்டியின் போது கூட இவர் கூறி இருக்கிறார். அதற்கு ஏற்ப தினகரனும் காங்கிரஸ் திமுகவை விட்டு வெளியேறினால் தான் கூட்டணி வைக்க தயார் என்றும் தெரிவித்திருந்தார். 

ஏற்கனவே தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலையும், பிரிவினைகளையும் வைத்து தான் பாஜக அரசியல் செய்து வருகிறது. இந்நிலையில் திமுகவும் அவர்கள் பக்கம் சென்றுவிட்டால் நமக்கான பலம் குறைந்துவிடும். 

அவ்வாறு நடந்தால் நாடாளுமன்ற தேர்தலில் நம் வெற்றி வாய்ப்பு குறைவதற்கு அதுவே காரணமாகிவிடும். எனவே திமுகவின் கூட்டணியை பெற நாம் எப்படியாவது முயற்சி செய்ய வேண்டும்.

அப்படி திமுக கூட்டணி கிடைக்காமல் போனால் ரஜினியை நம் பக்கம் இழுக்க பார்க்க வேண்டும். 
தினகரனோடு இணைவதால் எதிர்பார்த்த அளவு நம்மால் முன்னேற முடியாது. ஆனால் ரஜினிக்கும் இருக்கும்  செல்வாக்கே வேறு.அவருக்கு இந்திய அளவில் பட்டியல் இனத்தவரில் ரசிகர்கள் அதிகம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு என அவர் மூலம் கிடைக்கும் ஆதரவும் அதிகமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறது காங்கிரஸ் மேலிடம். 

ரஜினிக்கு இருக்கும் இந்த ஆதரவை அறிந்ததனால்  தான் திருமாவளவன் கூட அவரை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்.

திருநாவுக்கரசரும் ரஜினியை காங்கிரஸ் பக்கம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதே சமயம் காங்கிரஸின் இந்த திட்டம் புரிந்திருப்பதால் திமுக ஒரு பக்கம் காங்கிரஸின் முக்கியத்துவத்தினை குறைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறது. 

இதனால் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அரசியலும் மிக முக்கியமான பங்கை கொண்டிருக்கிறது என்பது இப்போதே தெரியவந்திருக்கிறது. இதில் யார்? யாருடன் சேர்ந்து வெல்ல போகிறார்? என்பது தான் இப்போதைக்கு கேள்விக்குறி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios