தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு நாளும் முதல்வர் ஆக முடியாது என, பா.ஜ.க, முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சிவகங்கையில் பேசுகையில், ’’தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க, மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், முதலில் பதவி ஏற்கும் போது வேலுநாச்சியாரை வணங்கித்தான் பணியை துவக்கினார். பள்ளி பாடப் புத்தகத்தில் வேலுநாச்சியார், சோழர் பற்றிய வரலாறு இல்லை. பா.ஜ., தேர்தல் அறிக்கை குழு தயாரித்து வருகிறோம். அதில், தமிழகத்தைச் சேர்ந்த மன்னர்கள், வீரதீரத்தில் ஈடுபட்டவர்களை பாட திட்டத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கப்படும்.

மக்களை சந்திக்க, ஸ்டாலின் எதுவானாலும் செய்யட்டும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஒரு நாளும் தமிழக முதல்வர் ஆக முடியாது என, மக்களே முடிவு செய்து விட்டனர். ஏன், அவரின் ஜாதகம் கூட அதை தான் சொல்கிறது. அழகிரி நேரடியாக அரசியலுக்கு வந்தால், வாழ்த்து தெரிவிக்கிறேன்’’ என அவர் தெரிவித்தார்.