எம்.ஜி.ஆர் மறைவுக்கு விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலி நாளிதழ் விளம்பரங்கள் இப்போது பகிரப்பட்டு வருகின்றன.

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் மறைவையடுத்து இயக்குனர் அமீர், அவருடைய சிறப்பைப் பற்றி ட்விட்டர், இணைய தள பேட்டிகள் மூலம் பதிவுசெய்தார். ஓர் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், “1982-ல் பிரபாகரன் பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு நிகழ்வில் கைதானதும், அவரை ஜாமீனில் வெளியே எடுத்தவர் ஜெ.அன்பழகன்தான். கலைஞர் கூறியதால், சென்னை தி.நகரில் தனது அலுவலகத்தில் 21 நாட்கள் தங்க வைத்திருந்தார். பிரபாகரனுக்கு சாப்பிடத் தேவையானவற்றை கேட்டுச் செய்தார் அன்பழகன். ஈழ அரசியலைப் பற்றி அப்போது அவருக்கு பெரிய புரிதல் இல்லை. என்றாலும் கலைஞர் சொன்னதால் மாவட்டச் செயலாளராக இருந்த அன்பழகன் இவற்றைச் செய்தார். இதையெல்லாம் அன்பழகனே என்னிடம் கூறியதாக” அமீர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவில் உள்ள கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அமீரின் பேச்சுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இப்படி ஆளாளுக்கு வரலாற்றை திரித்துக் கூறும் நிலையில் எம்.ஜி.ஆர் மறைவுக்கு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அனைத்து நாளிதழ்களிலும் வெளியிட்டுள்ள  கண்ணீரஞ்சலி விளம்பரம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், ‘’ ஈழத்திலே தமிழினம் அநாதையாக ஆதரவின்றி தத்துக் கொண்டிருக்கையிலே உதவிக்கரம் நீட்டி உறுதியாய் துணை நின்ற புரட்சித் தலைவனே...

தமிழீழப்போராட்டத்துக்கு ஆதரவு,, ஊக்கமும் கொடுத்த செயல்வீரனே தங்கள் இழப்புகள் வேதனைச் சகதியிலிருக்கும் தமீழ மக்களின் மார்பில் தீ மூட்டியதை போல் உள்ளது’’என தமிழகத்தில் வெளியான அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் வெளியிட்டிருந்தார் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்.