கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட யாராக இருந்தாலும் கட்டுப்பாடு ஒன்றுதான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் மற்றும் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளிக்கையில்;- சிவாஜி கணேசனின் 'சிந்து நதியின் மிசை' போன்ற பாடல்களைப் பாடி அமைச்சர் ஜெயக்குமார் அவரை நினைவுகூர்ந்துள்ளார். சிவாஜி கணேசன் ஒரு வரலாறு; பல காதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியவர் சிவாஜி என புகழாராம் சூட்டியுள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட யாராக இருந்தாலும் கட்டுப்பாடு ஒன்றுதான். அதிமுகவில் எப்போது பிரச்சினை வரும் என எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள். அமைச்சர்களும், தொண்டர்களும் அதற்கு இடம் அளிக்கக்கூடாது என்றார். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை நடத்துவதில் தவறில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.