எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களைத் தவிர அதிமுக தலைமை அலுவலகத்தில் வேறு யார் பெயர்களையும் குறிப்பிட்டு கோஷம் எழுப்பக் கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களைத் தவிர அதிமுக தலைமை அலுவலகத்தில் வேறு யார் பெயர்களையும் குறிப்பிட்டு கோஷம் எழுப்பக் கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த ஜூன் 14ம் தேதி நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராகப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று வந்து சிறிது நேரம் கட்சிப் பணிகளை ஆற்றினார். பிறகு இவர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது, அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை வாழ்த்தி முழக்கங்கை எழுப்பினர்.

இதனையடுத்து, முழக்கமிட்ட தொண்டர்களை அழைத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயரை தவிர வேறு யார் பெயரையும் கூறி முழக்கங்களை எழுப்பக் கூடாது என ஓபிஎஸ் அறிவுரை வழங்கினார். பின்னர், அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆர் வாழ்க, ஜெயலலிதா வாழ்க என்று முழக்கமிட்டனர்.