சொந்த ஊரில் இருந்தபோது நள்ளிரவு நேரத்தில் என் உதவியாளர் மூலமே தெரிந்து கொண்டேன். அடுத்த நாள் பிற்பகலில் அப்பல்லோ மருத்துவமனை சென்றபோது அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன் என்றார். விசாரணை ஆணையம் அமைக்க கூறியது யார்.? ஆணையம் அமைக்க முடிவு செய்தது யார்? என ஆறுமுகசாமி எழுப்பிய கேள்விக்கு,
ஜெயலலிதா குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஓபிஎஸ் இடம் விசாரணை நடந்தினால் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவரின் பதில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. விசாரணை ஆணையம் அமைக்கக் கோரியது யார்? என அவரிடம் ஆறுமுகசாமி எழுப்பிய கேள்விக்கு, பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது என ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். ஜெயலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக செயல்பட்டு வருகிறது, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் வேட்பாளர் என கட்சியின் எல்லாமாகவும் இருந்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியை ஓபிஎஸ் தான் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஒட்டுமொத்த கட்சியையும் கபளீகரம் செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியிலேயே அவர்மீது நம்பிக்கையை இழக்கவைத்துள்ளது. பன்னீர்செல்வம் சுயநலவாதி, எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்க துணிவில்லாதவர் என அவரின் ஆதரவாளர்களாலேயே விமர்சிக்கப்பட்டு வருகிறார் ஓபிஎஸ். இதற்கு சிறந்த உதாரணம் பெங்களூரு புகழேந்தியை கூறலாம். ஒரு கட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரரே ஓபிஎஸ்சை வெறுத்து சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறியுள்ளார்.

ஒரு சில நேரங்களில் சசிகலாவையும் ஆதரிப்பது போல பேசுவதும், பிறகு அடங்கிவிடுவதும் ஓபிஎஸ்சின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இது அவரது ஆதரவாளர்கள் மட்டுமல்ல அதிமுக தொண்டர்களையே குழப்பமடைய வைத்திருக்கிறது. அந்த அளவிற்கு அவர் என்ன நினைக்கிறார் என்பதை எவறுமே புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு அவரின் நடவடிக்கைகள் இருந்து வருகிறது. இதனால்தான் ஓ பன்னீர்செல்வத்திடமிருந்து எந்த விஷயத்தையும் அவ்வளவு எளிதாக எவரும் வாங்கி விட முடியாது என்பது அவரை அறிந்தவர்கள் கூறும் கருத்தாக உள்ளது.
இது ஒருபுறம் இருந்தாலும் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் இன்று ஆஜராகியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரித்தால் அதன் மூலம் வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என ஆறுமுகசாமி ஆணையம் எதிர்பார்த்த நிலையில் அவரது பதில்கள் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதாவது செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்தோ அல்லது அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தோ தனக்கு எதுவுமே தெரியாது என அவர் கூறியுள்ளதுதான் அது. சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி, ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் கூறிய விவரம் பின்வருமாறு:- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது எந்தெந்த மருந்துகள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது.

சொந்த ஊரில் இருந்தபோது நள்ளிரவு நேரத்தில் என் உதவியாளர் மூலமே தெரிந்து கொண்டேன். அடுத்த நாள் பிற்பகலில் அப்பல்லோ மருத்துவமனை சென்றபோது அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன் என்றார். விசாரணை ஆணையம் அமைக்க கூறியது யார்.? ஆணையம் அமைக்க முடிவு செய்தது யார்? என ஆறுமுகசாமி எழுப்பிய கேள்விக்கு, பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆணையம் அமைக்கப்பட்டது என்றார்.
ஜெயலலிதா மருத்துவமனை அனுமதிக்கப் படுவதற்கு முந்தைய தினமும் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்ட போது ஜெயலிதாவை பார்த்தேன் எனவும், அதற்குப் பின்னர் அவரைப் பார்க்கவில்லை எனவும் பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதைத் தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய கோப்பில் துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் நானும் கையெழுத்திட்டேன் என்றார்.
