Asianet News TamilAsianet News Tamil

டெங்கு காய்ச்சல் அலட்சியம் வேண்டாம்.. இதை பின்பற்றினால் போதும்.. அசத்தும் அன்புமணி.!

நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Do not ignore dengue fever...Anbumani Tips
Author
Tamil Nadu, First Published Oct 5, 2021, 5:00 PM IST

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. நடப்பாண்டில் சுமார் 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் நன்னீரில் தான் உருவாகின்றன. அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது தான் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் பணியாகும்.

Do not ignore dengue fever...Anbumani Tips

நீர் தேங்குவதற்கான வாய்ப்புகளை சரி செய்ய வேண்டும். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஒரு சிறப்பு இயக்கமாக நடத்த வேண்டும்.

Do not ignore dengue fever...Anbumani Tips

பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios