Asianet News TamilAsianet News Tamil

கொரோனா பிரச்சனையில் அரசியல் செய்ய வேண்டாம்.. எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்..!

தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியது போல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

Do not do politics in the corona problem.. Health Minister Ma. Subramanian
Author
Virudhunagar, First Published May 27, 2021, 5:58 PM IST

தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியது போல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக இன்று விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, செங்குன்றாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

Do not do politics in the corona problem.. Health Minister Ma. Subramanian

இதனையடுத்து, விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், உயிரிழப்புகள் ஏற்படுகிறது குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பிரச்சனை முடிவுக்கு வரும் வரை குற்றம் குறை சொல்ல வேண்டாம். குற்றத்தை சுட்டிக் காட்டவும் வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளார்.

Do not do politics in the corona problem.. Health Minister Ma. Subramanian

காபந்து முதல்ராக எடப்பாடி பழனிசாமி இருந்த 7ம் தேதி வரை 250 மெட்ரிக் டன் கையிருப்பு இருந்தது. தொற்று உயரும் நிலையில், 575 மெட்ரிக் டன் நாள் ஒன்றுக்கு தேவைப்பட்டது. 250 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை வைத்து கொண்டு ஒரு திறமையான நிர்வாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் தற்போது 650 மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி கூறியது போல், ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை. யாரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம். மக்கள் நலனை அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.

Do not do politics in the corona problem.. Health Minister Ma. Subramanian

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கொரோனா பிரச்சனையில் அரசியல் செய்ய வேண்டாம். முடிந்தால் தமிழகத்தின் கூடுதல் தேவைகளை மத்திய அரசிடம் பேசி பெற்றுத்தர வேண்டும் என்றார். 

Follow Us:
Download App:
  • android
  • ios