கட்சியின் பெயர், சின்னம் தொடர்பான விவகாரத்தில், எங்களைக் கோட்காமல் எந்தவிதமான முடிவும் எடுக்கக் கூடாது என டிடிவி தினகரன் தரப்பினர், தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

டெல்லியில் தினகரன் ஆதரவாளரும் கர்நாடக மாநில அதிமுக செயலாளருமான புகழேந்தி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம். ஆணைய விதிமுறைகளை மீறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக என்ற பெயரைப் பயன்படுத்துகிறார்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் நாங்கள்தான் எதர் மனுதாரர்களாக உள்ளோம். 

எனவே இது தொடர்பாக ஏதேனும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டாலோ அல்லது கோரிக்கை வைக்கப்பட்டாலோ எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். எங்களைக் கேட்காமல் இது தொடர்பாக எந்த விதமான முடிவும் எடுக்கக் கூடாது என்று மெனு கொடுத்துள்ளோம்.