தினகரனுடன் மோதல் வேண்டாம்! ஸ்டாலினை எச்சரித்த துரைமுருகன்!

First Published 11, Jan 2019, 9:53 AM IST
Do not clash with Dinakaran! Duraimurugan warned Stalin!
Highlights

தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு இனி பதில் சொல்லி அவருடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என்று துரைமுருகன் மு.க.ஸ்டாலினுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு இனி பதில் சொல்லி அவருடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என்று துரைமுருகன் மு.க.ஸ்டாலினுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் டி.டி.வி தினகரன் தீவிர அரசியலில் இருந்து வருகிறார். ஆனால் அவருக்கு எதிராக நடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் ஸ்டாலின் முதல் முறையாக பேட்டி அளித்தார். அதுவும் தினகரனை மிக கடுமையாக விமர்சித்து ஸ்டாலின் பேட்டி கொடுத்தார். இதற்கு காரணம் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தான விவகாரத்தில் ஸ்டாலினை கிண்டல் செய்து தினகரன கொடுத்த பேட்டி தான். 

அரசியலில் எலியூம் பூனையுமாக இருந்தாலும் கூட கடந்த 2 வருடங்களாக ஸ்டாலின் – தினகரன் நேரடியாக எந்த விஷயத்திலும் மோதிக் கொண்டது இல்லை. மதுரை பாப்பீஸ் ஹோட்டல் சந்திப்பு, சென்னை டி.பி.ஐ வளாக சந்திப்பு என இரண்டு பேரும் அரசியல் மாச்சர்யங்களை கடந்து புதிய அரசியல் கலாச்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் திடீரென இரண்டு பேரும் கலைஞர் – ஜெயலலிதா போல் அறிக்கை போருக்கு வித்திட்டு தற்போது அதனை தீவிரப்படுத்தியுள்ளனர். 

இதன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமியை டம்மியாக்கும் வியூகம் இருப்பதாக பேசப்படுகிறது. ஸ்டாலினும் – தினகரனும் பேசி வைத்துக் கொண்டு சண்டையிட்டுக் கொள்வதாகவும் விமர்சனங்கள் உள்ளன. அதாவது எடப்பாடியின்  அனைவருக்கும் ரூபாய் 1000 பொங்கல் பரிசுத் திட்டத்தை இருட்டடிப்பு செய்ய இருவரும் அறிக்கை போர் மூலமாக ஊடகங்களுக்கு தீனி போடுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் ஸ்டாலின் வியூகம் பின்னடைவை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

ஏனென்றால் பிரச்சனையை தினகரன் ஆரம்பித்து வைத்தாலும் அதனை தீவிரப்படுத்தியது ஸ்டாலின் பேட்டி தான். ஆனால் அதன் பிறகு தினகரன் கொடுத்த அறிக்கை தான் செம ரீச் என்கிறார்கள். அதுவும் திருவாரூர் திருட்டு ரயில் மேட்டர் அறிக்கை தினகரனை சோசியல் மீடியாக்களில் வெகுவாக பிரபலமாக்கியுள்ளது. அந்த விஷயத்திற்கு தற்போது வரை ஸ்டாலின் நேரடியாக பதில் அளிக்காததும் சமூக வலைதளங்களில் தினகரனுக்கு ஒரு எட்ஜ்ஜை கொடுத்துள்ளது.

மேலும் அரசியல் விமர்சகர்கள், மூத்த அரசியல்வாதிகள், தி.மு.க நிர்வாகிகள் கூட தினகரனுடனான மோதல் போக்கில் ஸ்டாலின் பின்தங்கியுள்ளதாக பேசியுள்ளனர். இந்த விவகாரம் உடனடியாக துரைமுருகன் கவனத்திற்கு செல்ல, தினகரன் உடனடியாக ஸ்டாலினை தொடர்பு கொண்டு தினகரன் விஷயத்தில் கவனம் தேவை, அவசரப்பட்டு அவரை வளர்த்துவிட்டு விடக்கூடாது, எடப்பாடியை கூட எளிதாக நாம் எதிர்கொண்டு விடலாம் என்று எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஏற்று ஸ்டாலினும் தினகரன் விஷயத்தில் வியூகத்தை மாற்றுவது குறித்து யோசித்து வருகிறாராம்.

loader