Asianet News TamilAsianet News Tamil

Siddharth: மன்னிப்பு கேட்டு பாஜக உருட்டல் மிரட்டலுக்கு அஞ்ச வேண்டாம்... சித்தார்த்தை தூண்டும் ஆதரவாளர்கள்..!

சித்தார்த்  தவறு என்றாலும், ஏன் அவரை மட்டும் தண்டிக்க வேண்டும்? இதே தவறை செய்த மற்றவர்களை ஏன் தண்டிக்கவில்லை.

Do not be afraid of BJP rolling threats to apologize ... Supporters who incite Siddharth
Author
Tamil Nadu, First Published Jan 12, 2022, 10:57 AM IST

சமூக வலைத்தளங்களில்  ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அத்துடன் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் வழக்கம். அந்த வகையில்  இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் பதிவுக்கு சித்தார்த்தின் பதில் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.Do not be afraid of BJP rolling threats to apologize ... Supporters who incite Siddharth

பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டைக் குறிப்பிட்டு, ஜனவரி 5-ந் தேதி அன்று பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஒரு டுவிட் போட்டிருந்தார். அதில் "ஒரு நாட்டில் பிரதமருக்கே பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால் அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாகக் கூற முடியாது. நான் இதை கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கிறேன். பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்”  என கடுமையாக சாடி இருந்தார்.

சாய்னாவின் இந்த டுவிட்டிற்கு நடிகர் சித்தார்த் போட்ட பதில் டுவிட் தான் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. அந்த டுவிட்டில் அவர் குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தம் கொண்டதாக இருப்பதாகவும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. Do not be afraid of BJP rolling threats to apologize ... Supporters who incite Siddharth

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த இந்திய மகளிர் ஆணையம் பரிந்துரை அளித்திருந்தது. மேலும், சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூட தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதுதவிர சித்தார்த்துக்கு எதிராக நடிகை குஷ்பு, கிரிக்கெட் வீரர் ரெய்னா என பல்வேறு பிரபலங்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்திருந்ததால் இந்த விவகாரம் பூதாகரமானது. 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் சாய்னாவிடம் மன்னிப்பு கோரி நடிகர் சித்தார்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “டியர் சாய்னா... கடந்த சில நாட்களுக்கு முன்பு உங்கள் டுவிட் ஒன்றிற்கு மூர்க்கத்தனமான ஜோக்குடன் பதிலளித்தமைக்காக, நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பல விஷயங்களில் நான் உங்களுடன் உடன்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் உங்கள் டுவிட்டைப் படித்த போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட, எனது தொனி மற்றும் வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது. Do not be afraid of BJP rolling threats to apologize ... Supporters who incite Siddharth

என்னால் அதை விட சிறப்பாகப் பேச முடியும் என்பதை நான் நன்கு அறிவேன். எந்தவொரு ஜோக்கையும் விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல ஜோக்காக இருக்காது. எனவே, அந்த ஜோக்கிற்காக என்னை மன்னிக்கவும்.

 

இருப்பினும், என்னுடைய டுவிட்டில் உள்ள வார்த்தை விளையாட்டு, நகைச்சுவையானது மட்டுமே. அது அனைவரும் நினைக்கும்படி எந்தவித உள்நோக்கமும் இல்லை என்பதை நான் கூறிக்கொள்கிறேன். நான் எப்போதும் பெண்ணியவாதிகள் பக்கம் நிற்பவன். ஒரு பெண்ணாக உங்களைத் தாக்கும் நோக்கம் எனக்கு நிச்சயமாக இல்லை என்பதை உறுதியாக கூறுகிறேன். எனவே, இத்துடன் இந்த விஷயத்தை நாம் விட்டுவிடலாம். நீங்கள் எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்போதும் என் சாம்பியன் தான்" என்று பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios