முதலமைச்சர் ஓபிஎஸ் ஐ சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், ஜெயா டிவி பார்க்காதீங்க.. அவங்க பொய்யா சொல்லுராங்க என அதிரடியாக தெரிவித்தார்.

சசிகலா, ஓபிஎஸ் இடையே எழுந்த மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சசிகலா தரப்புக்கு ஆதரவு அளித்து வந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகின்றனர்.

அதே நேரத்தில் ஓபிஎஸ்க்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. 6 எம்எல்ஏக்கள், 8 எம்பிக்கள் ஆதரவளித்துள்ளனர்.அதே போன்று முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் நடிகர்களும் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்று ஓபிஎஸ் இல்லத்திற்கு இன்று வருகை தந்த நடிகர்கள் அருண் பாண்டியன், தியாகு,ராமராஜன் ஆகியோர் அவரை சந்தித்து ஆதரவி தெரிவித்தனர்.

நடிகர் அருண் பாண்டியன் பேசும்போது, ஜெயா டிவி பார்க்காதீங்க அதுல பொய்யா சொல்லுராங்க என்று கலாய்த்தார். சசிகலா இருக்கும் அந்த வீடு வெறிச்சோடிக் காணப்படுகிறது என தெரிவித்தார்.

நடிகர் ராமராஜன் பேசும்போது, எம்ஜிஆர் மூன்றெழுத்து, அம்மா மூன்றெழுத்து, அதே போன்று ஓபிஎஸ் என்பதும் மூன்றெழுத்து என தெரிவித்தார். ஓபிஎஸ் என்பதற்கு புது விளக்கம் ஒன்றையும் அவர் கூறினார். அதாவது ஓயாமல் பொறுப்புடன் செயல்படுபவர் என ஓபிஎஸ்க்கு பாராட்டத் தெரிவித்தார்.

நடிகர் தியாகு ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டு, மக்களால் விரும்பப்படும் ஒரு தலைவராக ஓபிஎஸ் திகழ்வதாக குறிப்பிட்டார்.