தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு இன்று காலை சந்தித்தார். சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்யா நாயுடு, மத்திய அமைச்சர் என்ற முறையில், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று கூறினார்.

அப்போல்லோவில் முதல்வர் உடல் நிலை குறித்து கேட்டறிந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அவர் தைரியமான முதலமைச்சர் விரைவில் நலம் பெறுவார் , வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டு கொண்டார். 

தமிழக ஆட்சி நிர்வாகம் குறித்து பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஆளும் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, சென்னை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று முதலமைச்சர் ஜெயலாலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.