அ.தி.மு.க என்றாலே அது முக்குலத்தோர் கட்சி என்கிற முத்திரை வாக்காளர்கள் மனதில் பதிந்திருக்கிறது. கள்ளர் மறவர் அகமுடையார் இந்த மூன்றும் ஒருங்கிணைந்தது தான் முக்குலத்தோர். தற்போது அகமுடையர்களுக்கு எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.கவில்  எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்கிற அதிருப்தி காட்டுத்தீயாக பரவிக்கொண்டிருக்கிறது. தென்மாவட்டங்களில்  அ.தி.மு.க, திமுக அதிகமான இடங்களில் வெற்றிக்கனியைப் பறிக்கும்.  

தென் மாவட்டத்தை கைப்பற்ற திமுக தலைவர் ஸ்டாலின் வியூகம் வகுத்திருக்கிறார்.அதற்காக  மதுரை, வடக்கு மேற்கு ஆகிய இரண்டு தொகுதிக்கும் மாவட்டச்செயலாளராக எம்எல்ஏ டாக்டர் .சரவணன், சிவகங்கை மாவட்டத்தை இரண்டாக பிரித்து சேங்கைமாறனையும், இராமநாதபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து சுப.திவாகரனையும் நியமிக்க இருக்கிறார் ஸ்டாலின். தென்மாவட்டத்தில் அதிமுகவிற்கான மைனஜை  அகமுடையாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான்  டாக்டர்.சரவணனையும்.சேங்கைமாறனையும் கையிலெடுத்திருக்கிறது திமுக.

  முக்குலத்தோரில் அதிகமான வாக்கு வங்கிகளைப் பெற்றிருக்கும் அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட திமுகவில் மாவட்டச்செயலாளர்களாக இல்லை. அதே நேரத்தில் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் எனக் கணக்கு பார்த்தால் அதுவுமே சொல்லும்படியாக இல்லை. இதனால் இந்த சமூக மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். மறக்கமாட்டோம் மன்னிக்க மாட்டோம் தேவருக்கே லஞ்சமா என்று இராமநாதபுரம் பகுதியில் போஸ்டர் ஒட்டிய சுரேஷ் அதிமுக காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார். சின்னமருது பெரிய மருது சிலைக்குத் தங்கக் கவசம் அணிவிகாதது ஏன் என அகமுடையார் மக்களிடம் இருந்து எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றைக்கேள்வி தான் இந்த முறை அரசியல் கட்சிகளின் முதலமைச்சர் நாற்காலியை அசைத்து பார்க்க இருக்கிறது. 

தென்மாவட்டங்களைப் பொறுத்தவரை மதுரை வடக்கு மேற்கு திருமங்கலம் சோழவந்தான்   இராமநாதபுரம் புதுக்கோட்டை அறந்தாங்கி விருதுநகர் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் சிவகங்கை தஞ்சாவூர் மன்னார் குடி பேராவூரணி பட்டுக்கோட்டை உள்ளிட்ட 22 தொகுதிகளில் நாங்கள் பெரும்பான்மையாக இருக்கிறோம். மற்ற நாற்பத்து இரண்டு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் இடத்தில் இருக்கிறோம்.. மறவர் கள்ளர் கூட குறிப்பிட்ட பேக்கேஸ்க்குள் அடங்கிவிடுவார்கள் ஆனால் அகமுடையார் மட்டும் தான் தமிழகம் முழுவதும் பரவலாகப் பரவியிருக்கிறோம். திமுகவில் கோசி .மணி பொன்.முத்துராமலிங்கம் டி.ஆர் பாலு தா.கிரு~;ணன் போன்றவர்கள் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.

இவர்களுக்குப் பிறகு தென்தமிழகத்தில் அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறார். ஆதனால் தான் அதிமுகவின் கோட்டையான திருப்பரங்குன்றம் தொகுதியில் அகமுடையோர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அதே நேரத்தில் மக்கள் மத்தியில் எளிமையான மருத்துவராக வலம் வரக்கூடிய டாக்டர். சரவணனை அங்கே நிறுத்தினால் இடைத்தேர்தல்களில் வெற்றி பெறலாம் என்று திமுக தலைமை முடிவெடுத்து நிறுத்தியது.2018ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அகமுடையோர்கள் ஓரணியில் நின்று கட்சி பார்க்காமல் எங்கள் ஓட்டு அகமுடையோருக்கே என்று சொல்லி வாக்களித்து வெற்றி பெற வைத்தார்கள்.

மதுரை வடக்கு மேற்கு திருப்பரங்குன்றம் திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் அகமுடையோர்கள் தான் அதிகம். அவர்கள் தான் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் தென்தமிழகத்திற்கு அகமுடையார் பிரதிநிதியாக டாக்டர். சரவணனை முன்னிறுத்தி வருகிறார்.

தமிழகம் முழுவதும் திமுக இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ நியமனம் செய்து வருகிறது. மதுரை தேனி சிவகங்கை இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்வதற்கான வேலைகள் மும்மரமாக இருக்கிறது. தேனி மாவட்டத்தில் தங்கத்தமிழ் செல்வன் திமுகவின் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தென் தமிழகத்தின் தலைநகரான மதுரை மாவட்டத்தில் திமுக மாவட்டச்செயலாளர்களாக இருக்கும் கோ.தளபதி எம்எல்ஏ மூர்த்தி மணிமாறன் போன்றவர்கள் அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர்.சரவணன் மாவட்டச்செயலாளராக வந்துவிடக்கூடாது என்பதற்காக புதிய கூட்டணியை ஆரம்பித்திருக்கிறார்கள். 

திமுக தலைவர் ஸ்டாலின் மதுரை வடக்கு மேற்கு ஆகிய இரண்டு தொகுதிகளைப் பிரித்து அந்த தொகுதிக்கு புதிய மாவட்டச் செயலாளராக டாக்டர் சரவணனை நியமனம் செய்ய முடிவெடுத்திருக்கிற என்கிற செய்தி தெரிந்ததும் மும்மூர்த்தி மாவட்டச் செயலாளர்கள் ஒன்று கூடிப் பேசி மத்திய தொகுதி எம்எல்ஏ பிடிஆர்.பழனிவேல்தியாகராஜனை மாவட்டச்செயலாளராக நியமனம் செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி எம்எல்ஏ. இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தன்னைத் தவிர மற்றவர்கள் தோற்க வேண்டும். இல்லையெனில் தான் அமைச்சராக முடியாது என்று கருதி முன்னாள் அமைச்சர் தமிழரசியை டார்;ச்சர் கொடுத்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்குப் போக வைத்தார்.அதே வேளையை வர இருக்கும் சட்டமன்றத்தேர்தலில் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார் மூர்த்தி. அகமுடையரான எம்எல்ஏ.டாக்டர்.சரவணன் வளர்ந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருகிறார் மா.செ.மூர்த்தி

பொன்.முத்துராமலிங்கம் வயது முதுமையின் காரணமாகக் கட்சியில் முழுவீச்சில் இறங்கிச் செயல்பட முடியாமல் போனார்.அந்த இடத்திற்கு எம்எல்ஏ.டாக்டர்.சரவணனை கொண்டுவந்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.இதை பொறுக்கமுடியாமல் மும்மூர்த்தி கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.

திமுகதலைமை கழகம் சென்னையிலிருந்தாலும் மதுரையில் எம்எல்ஏ.டாக்டர்.சரவணன் எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுத்துவருகிறார்.பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜன் ஒரு பேட்டியின் போது அம்பட்டையன் என்று சொல்லியது சர்ச்சையை ஏற்படுத்தியது.அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் எம்எல்ஏ.சரவணன் தான் என்கிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.தென் தமிழகத்தில் உள்ள மா.செகள் அமைச்சர் கனவில் தன் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெற்று விடக்கூடாது என்று உள்ளடி வேலை பார்த்ததில் தான் திமுக தோல்வியைத் தழுவியது என்பதை திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பட்டியல் போட்டுக் கொடுத்திருக்கிறது ஐபேக் டீம்.