ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து  தேமுதிக சார்பில் வரும் 9 ஆம் தேதி மதுரை அலங்காநல்லுரில் போராட்டம் நடத்த போவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகார்ந்த் அறிவித்துள்ளார்.

தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு ஒரு பெரும் திருவிழாவாகவே நடைபெறுகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஜல்லிகட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஜல்லிகட்டுக்குப் பெயர் போன அலங்காநல்லுர்,பாலமேடு, அவனியாபுரம் போன்ற ஊர்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இந்நிலையில் தேமுதிக தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டாவது நடைபெறுமா தமிழக இளைஞர்கள் ஏங்கித் தவிப்பதாக தெரிவித்துள்ளார்.மத்திய, மாநில அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெறுவது போல் தெரியவில்லை என குறிபிட்டுள்ள விஜயகாந்த், இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி வரும் வரும் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு மதுரை அலங்காநல்லுரில் தேமுதிக சார்பில் தனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.